PACL வீழ்ந்த வரலாறு..! பணம் திரும்ப கிடைக்குமா.. தொடர்.. 2]
ஏதாவது ஒரு காரியம் செய்து பணக்காரர் ஆக வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள் ஒரு புறம். எவ்வளவு சம்பாதித்தாலும் கையில் பத்து பைசா மிச்சப்படுத்தவில்லை என்ற அங்கலாப்பு கொண்டவர்கள் மறுபுறும். இவர்கள் இருவரும் இணையும் ஒரு புள்ளியில் தான் டுபாக்கூர் தனங்கள் அதிகமாக அரங்கேறுகிறது. 80கள் காலத்தில் அனைவருக்கும் தெரிந்த ஒன்று ஆம்வே. வீட்டுக்கு வீடு பெண்கள் மற்றும் பத்தாம் வகுப்பு, பனிரெண்டாம் வகுப்பு முடித்தவர்கள், “ரூ.4,000 மதிப்புள்ள பொருள் வாங்குங்கள். 10 பேரை சேர்த்துவிட்டால் நீங்கள் முதலீடு செய்த ,4000 ரூபாய் திரும்பி வந்துவிடும். அத்துடன் ரூ.4,000 பொருளும் மிச்சம் என ஆசை வார்த்தை கூறுவார்கள். அத்துடன் நிற்பதில்லை.
தொடர்ந்து இதையே செய்தால் கார், பங்களா வாங்கலாம். வெளிநாடு சுற்றுலா செல்லலாம். உங்கள் வாழ்க்கை தரமே மாறவிடும் என்றெல்லாம் மிகப் பெரிய அளவில் ஆசை வார்த்தை கூறுவார்கள். ஆம்வேயின் தொடர்ச்சி தான் இந்தியாவில் எம்.எல்.எம். வர்த்தகம் சூடு பிடித்த காலம் என்று சொல்லலாம். ஏல சீட்டு நடத்தியவர்கள், டுபாக்கூர் தனம் செய்து சம்பாதிக்க வேண்டும் என நினைத்தவர்கள் பலரும் சேர்வது, தொடங்குவது எம்.எல்.ஏ. நெட் ஒர்கிங் பிசினஸ் தான்.
அந்த வரிசைகளில் ஒன்றான PACL உங்கள் முதலீட்டின் மூலம் உங்கள் பெயரில் ஏராளமான சொத்துக்களை வாங்கி லாபகரமான விற்று உங்களுக்கு திருப்பி அளிக்கும் என்றெல்லாம் ஆசை வார்த்தை கூறி 15 ஆண்டுகளில் பிஏசிஎல் மற்றும் பியர்ல்ஸ் கோல்டன் ஃபாரஸ்ட் லிமிடெட் (பி.ஜி.எஃப்.எல்) ஆகியவற்றின் மூலம் முதலீட்டாளர்களிடமிருந்து ரூ.49,100 கோடி சேகரிக்கப்பட்டன என்றும், முதலீட்டாளர்களின் எண்ணிக்கையோ 6 கோடியை தாண்டியது என்றும் சென்ற இதழில் கூறியிருந்தோம்.
மேலும் PACL நிறுவனம் 7 ஆண்டுகளில், இந்தியாவில் 3 கோடி ஏக்கர் நிலம் வாங்கியிருப்பதாக அறிவித்ததோடு, வசூலித்த பணத்திற்கு சொத்து வாங்கி வைத்திருக்கிறார்கள். இதனால் முதலீட்டாளர்களுக்கு பணம் தருவதில் என்ன பிரச்சனை வந்துவிடப் போகிறது என்ற எண்ணத்தால் பிஏசிஎல் நிறுவனம் தாறுமாறாக தனது கிளையை பரப்பி ஏராளமான இடங்களில் முதலீடு, வரவிற்கு மீறிய செலவு, ஆடம்பரம் இவையெல்லாம் முதலீட்டாளர்களின் கண்ணிற்கு பெரிதாக தெரியவில்லை.
PACL நிறுவனம் பற்றி அறிவதற்கு முன்பு அந்நிறுவனத்தின் உரிமையாளர் பற்றியும் சில விஷயங்களை நாம் இங்கே காண்போம். பி.ஏ.சி.எல். நிறுவனம் தொடங்கிய போது சரியான பாதையில் தான் அதன் பயணத்தை தொடங்கி வைத்தார். ஆனால் அவர் எதிர்பார்த்ததைவிட அளவிற்கு மீறிய வரவேற்பு அவரை திக்குமுக்காடச் செய்தது என்றே சொல்லலாம். PACL நிறுவனத்தின் உரிமையாளரான நிர்மல் பாங்கு தனது நிறுவனம் வளரத் தொடங்கியதும் கையில் குவிந்த பணம் அவருக்கு ரியல் எஸ்டேட் தொழில் மீது கவனம் திரும்பியது. இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதிலும் பணத்தை தண்ணீராக இறைத்து இடங்களை வாங்கிக் குவித்தார். கிட்டத்ட்ட ரியல் எஸ்டேட் மன்னராக வலம் வந்தார் என்று சொல்லலாம். நிர்மல் பங்கிற்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளார்.
ஆஸ்திரேலியாவில் உள்ள குயின்ஸ்லாந்தில் தொழில் மற்றும் நல்ல முதலீட்டு திட்டங்களுக்கு தனது பணத்தை முதலீடு செய்தார். இதையடுத்து ஆஸ்திரேலிய அரசு அவரது செயல்பாட்டை பாராட்டி ஒரு மில்லியன் டாலர் வீட்டை பரிசாக வழங்கியது. அவரது மகன் மற்றும் மகள் அவருடைய விருதினைப் பெற்றார். மகன் ஒரு விபத்தில் மறைந்ததையடுத்து தனது இரண்டு மகள்களை ஆஸ்திரேலியாவில் உள்ள தனது வர்த்தகத்தை கவனிக்க அனுப்பி வைத்தார்.
இதன் பின்னர் நிர்மல் பங்கின் குடும்ப உறுப்பினர்கள் ஆஸ்திலேயாவில் பெரும் செல்வாக்குடன் வலம் வந்தனர். அரசாங்கத்துடன் பல முக்கிய புள்ளிகளுடனும் தொடர்பு கொண்டிருந்தனர். ஆஸ்திரேலிய அரசின் உதவியுடன் அங்கு ஏராளமான சொத்துக்களை, இடங்களை வாங்கிக் குவித்தனர். சொத்து வாங்குவதற்கும் பதிவு செய்வதற்கும் அரசு அதிகாரிகள் பெரும் உதவி புரிந்தனர். கோல்ட் கோஸ்ட்டில் உள்ள ஷெரட்டன் மிர்ஜ் ரிசாரட் இதற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாகும். காரணம் இந்த இடத்தை யாரும் எளிதில் வாங்க முடியாது.
இப்படி அபார வளர்ச்சி பெற்ற பிஏசிஎல் ஏன் சாமானிய மக்களின் முதலீட்டில் கைவைத்தது என்பதற்கு பல காரணங்கள். அதில் ஒரு காரணம் அளவிற்கு மீறிய ஆடம்பரம்.
அதை அடுத்த வாரம் பார்ப்போம்…..