தடுமாறும் தொழில்நுட்பம் மக்கள் கவனிக்க வேண்டிய வங்கி செயல்பாடுகள்
இன்றைய காலகட்டத்தில் கம்ப்யூட்டர் தொழில்நுட்பம் மூலம் பணபரிமாற்றம், மின்சாரம், கேஸ் பில் கட்டுதல் உட்பட பல தேவைகளை எளிதில் நிறைவேற்ற முடிகிறது. ஆனாலும் சில நேரங்களில் நெட்வொர்க் சரியில்லை, டெக்னிக்கல் குறைபாடு நிகழ்வதால் நமது கடைசி நிமிட செயல்பாட்டை நிறுத்திக் கொள்ள வேண்டிதாகிறது. மேலும் பாதுகாப்பு மிக்க நெட்வொர்க்கையே மக்கள் பயன்படுத்த வேண்டும்.
அடிக்கடி பாஸ்வேர்ட் மாற்றுதல், லாக்இன் ரகசியம் வேண்டும். ஆன்லைனில் பிரச்னை -ஏற்பட்டால் வங்கி கிளைகளுக்கு நேரடியாக செல்ல வேண்டும். வங்கிகள் தரும் ஸ்டேட்மென்டை பொறுமையாக சரி பார்க்க வேண்டும். நீங்கள் ஆன்லைனில் வைத்த டெபாசிட் குறித்த விவரங்களை ஸ்கிரின்சாட் எடுத்து கொள்ள வேண்டும்.