Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

வங்கிகளை நிர்வகிக்கும் திருச்சி ஆளுமை பெண்மணி ஆர்.புஷ்பலதா

அடகு - ஏல நகையை மீட்டு மறு அடகு வைக்க - விற்க

வங்கிகளை நிர்வகிக்கும் திருச்சி ஆளுமை பெண்மணி ஆர்.புஷ்பலதா

பஞ்சாப் நேஷனல் வங்கி
இந்தியாவில் உள்ள பொதுத்துறை வங்கிகளில் மிகப் பெரிய வங்கிகளின் வரிசையில் இரண்டாவது இடத்தை பெற்றுள்ளது பஞ்சாப் நேஷனல் வங்கி. திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட மாவட்டங்களில 56 வங்கிக் கிளைகளை நிர்வகிக்கும் வட்டார தலைவர் (CIRCLE HEAD)) ஒரு பெண்மணி.! ஆர்.புஷ்பலதா.

“என்னுடைய 20வது வயதில் பி.காம். இறுதியாண்டு படித்த போதே பஞ்சாப் நேஷனல் வங்கியில் கிளரிக்கல் வேலை உறுதியாகிவிட்டது. அலுவலக ஊழியராக பணியில் சேர்ந்த நான் பின்னர் படிப்படியாக பதவி உயர்வு பெற்று இன்று வட்ட தலைவர் என்ற பொறுப்பை வகித்து வருகிறேன்.
“வங்கியில் என்னை சந்தித்துச் சென்றால் ஒரு மனநிறைவுடன் திரும்ப வேண்டும் என்பதை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டது, என்னுடன் பணியாற்றிய சக பணியாளர்களின் ஒத்துழைப்பே என்னை இந்த இடத்திற்கு உயர்த்தியுள்ளது.

கணவனை இழந்த ஒரு பெண். கடன் வாங்கி கட்ட முடியாத சூழலில் ஒரு லட்சம் கடன் பாக்கி. வாங்கிய கடனை திரும்ப கட்ட வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருந்தார். ஆனால் அதற்கான வாய்ப்பின்றி தவித்தார். அந்த பெண்ணிற்கு தனிப்பட்ட முறையில் கடனுதவி செய்து வியாபாரத்தை தொடர உதவினேன். பின்னர் அவர் கொஞ்சம் கொஞ்சமாக கடனை திருப்பி செலுத்தினர்.

Visit Kavi Furniture and get to Know about us better. Experience our Furniture First Hand in a setting designed to feel like home

கடனை செலுத்தாதவர்களை ரொம்பவும் நெருக்கினால் திரும்ப கிடைக்கும் என்பதில் எண்ணத்தை கைவிட்டு முடிந்தவரை அவர்களுடன் பேசி கடனை வசூல் செய்து விடுவேன். வங்கிக் கடனில் ஆட்டோ வாங்கிய ஒரு ஆட்டோ ஓட்டுநர் கடன் கட்டாமல் இருந்தார். அவரிடம் கேட்டுப் பார்த்தும் பொறுப்பாக பதில் கூறவில்லை. அவர் மனைவியிடம் பொறுமையாக, வங்கியின் நடவடிக்கை குறித்தும்,

பெண் வாடிக்கையாளருக்கான வசதிகள்
பஞ்சாப் நேஷனல் வங்கியில் பெண் வாடிக்கை யாளர்களுக்கு சில சலுகைகள் உண்டு. வீட்டுக் கடன் திட்டத்தில் 0.5 சதவீதம் வட்டி குறைவு உண்டு. டாகுமெண்ட் கட்டணம் கிடையாது. இருசக்கர வாகன கடனிலும் 0.85 வட்டி குறைவு உண்டு. லாக்கர் கணக்கு தொடங்க 25 சதவீதம் சலுகை உண்டு.

பெண்கள் நிதித் தன்னிறைவை அடைவதற்காக பவர் சேமிப்பு கணக்கு திட்டத்தை பிஎன்பி அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின் கீழ் பெண்கள் சேமிப்புக் கணக்கு தொடங்கலாம். கூட்டு சேமிப்பு கணக்கும் ((Joint account) ) தொடங்கலாம். எனினும், கூட்டு கணக்கில் முதல் பெயர் பெண்ணுடையதாக இருக்க வேண்டும். இத்திட்டத்தின் கீழ் டெபிட் கார்டு, செக் புக், இலவச நெஃப்ட், இலவச SMS சேவை, 5 லட்சம் ரூபாய் வரை இலவச விபத்து மரணக் காப்பீடு உள்ளிட்ட பல்வேறு சேவைகள் கிடைக்கும்.. ஒரு நாளுக்கு ரூ.50,000 வரை பணம் எடுக்கலாம்..

பிசினஸ் டிவி செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள

பஞ்சாப் நேஷனல் வங்கி பிற திட்டங்கள்
மகிளா உதயம் நிதி : மகிளா உதயம் நிதி என்ற திட்டத்தின் பெண்கள் தொழில் தொடங்குவதற்கு சிறப்புக் கடனுதவியை பஞ்சாப் நேஷனல் வங்கி வழங்குகிறது. இத்திட்டத்தின் கீழ் பெண்கள் தங்களது தொழிலைத் தொடங்கி நடத்த முடியும். புதிய தொழில்நுட்பம், தொழில் வளர்ச்சி, திறன் மேம்பாடு போன்றவற்றில் பெண்களுக்கு இத்திட்டம் பெரிதும் உதவுகிறது.

மகிளா சம்ரிதி யோஜனா : பஞ்சாப் நேஷனல் வங்கியின் மகிளா சம்ரிதி யோஜனா திட்டத்தின் கீழ் நான்கு பிரிவுகள் உள்ளன. இதில் தொழில் நிறுவனம் அமைப்பதற்கான உள்கட்டுமான வசதிகளுக்கு இவ்வங்கி கடன் வழங்குகிறது

Scheme to start crèche  : பெண்கள் தங்களது வீட்டிலேயோ அல்லது தனியாக ஒரு இடத்திலோ குழந்தைகள் பராமரிப்பு மையத்தைத் தொடங்க விரும்பினால் இத்திட்டத்தின் கீழ் கடன் பெறலாம். இந்த மையத்துக்குத் தேவையான அனைத்து பொருட்களையும் வாங்க இதில் நிதியுதவி கிடைக்கிறது.

Mahila Sashaktikaran Scheme  : இத்திட்டத்தின் கீழ் பெண்கள் தங்களது தொழிலை முன்னேற்றிச் செல்ல முடியும். வேளாண்மை அல்லாத இதர சிறு தொழில்களுக்கு இத்திட்டத்தின் கீழ் சுய உதவிக் குழு மற்றும் இதர அமைப்புகள் மூலமாக உதவிகள் வழங்கப்படுகின்றன.

ஆட்டோவை பறிமுதல் செய்தால் வாழ்வாதாரம் பாதிக்கும் என்பது குறித்தும் எடுத்துச் சொன்னேன். பின்னர் படிப்படியாக கடனை அடைத்தனர். ஏராளமான சுயஉதவிக்குழுக்களுக்கு கடனுதவி செய்து அவர்களுக்கு உதவி செய்துள்ளேன்.
இருபது ஆண்டுகளுக்கு முன்பு அந்தமானில் பணியாற்றிய போது கடன் வாங்கிய வாடிக்கையாளர், கடனை திருப்பி செலுத்தாமல் என்னிடம் NO DUE சர்டிபிகேட் கேட்டார். தராவிட்டால் என்னால் உன்னை என்ன வேண்டுமென்றாலும் செய்ய முடியும். மாலை நீ மட்டும் தான் தனியாக குழந்தையுடன் வீட்டிற்கு போவாய். அப்போது உன்னை என்ன செய்கிறேன் பார். உன்னை பற்றி அவதூறு செய்தி பரப்புவேன் என்றெல்லாம் மிரட்டினார்.

நானும், NO DUE சர்டிபிகேட் தர முடியாது உன்னால் என்ன செய்ய முடியுமோ செய்துக்கோ” என தைரியமாக கூறிவிட்டேன். என்றாலும் உள்ளுக்குள் பயம் இருந்தது. என் அலுவலக ஊழியர்களிடமும், வங்கி ஃபோரத்திடம் (FORUM)  விஷயத்தை சொல்லி அந்த பிரச்சனையிலிருந்து மீண்டு வெளியே வந்தேன்.
என் கணவர் பிஎஸ்என்எல்லில் டிஜிஎம்மாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். சென்னையில் பெருவெள்ளம் ஏற்பட்ட காலத்தில் எங்குமே ஏடிஎம் வேலை செய்யவில்லை. அப்போது நான் சென்னை, தாம்பரம் பஞ்சாப் நேஷனல் வங்கி அலுவலகத்தில் பணியாற்றிய போது, கணவரின் உதவியுடன் நெட்வொர்க் சரி செய்து பொது மக்களுக்கு ஏடிஎம்மில் பணம் கிடைக்கும் வகையில் கார் முழ்கும் அளவிலான வெள்ளத்தில் கரன்சி எடுத்துச் சென்று அனுபவம் உண்டு.

பணமதிப்பிழப்பின் போதும் மைக்ரோ ஏடிஎம் மூலம் மக்களுக்கு பணம் கிடைப்பதற்கு வகை செய்துள்ளேன். அலுவலக ஊழியராக பணியில் சேர்ந்து SCALE-1 தொடங்கி இப்போது இந்த இடத்தை அடைந்திருக்கிறேன். அனைத்து விதமான பணியிடங்களிலும் பணியாற்றியுள்ளேன்.

ஆணாதிக்கம் இருந்தாலும் அதையெல்லாம் தாண்டி நமது பணியில் நாம் நேர்மையுடனும், நாம் யார் என்பதை அவர்களுக்கு உணர்த்தும் வண்ணமும் பணியாற்றினால் எந்த இடத்திலும், எந்த நிலையிலும் நாம் சாதிக்கலாம்” என்கிறார் வட்டாரத் தலைவர் புஷ்பலதா.

 

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.