திருச்சி காஞ்சனா கறி விருந்து! ஸ்பெஷல் மீல்ஸ்.. மட்டன் கறி தோசை..!
திருச்சி வரும் அரசியல் தலைவர்கள், மதிய உணவென்றால் காஞ்சனாவிலிருந்து தலைகறி, குடல் குழம்பு வாங்கி சாப்பிடாமல் செல்ல மாட்டார்கள். அப்படி ஒரு ருசியை அனைவர் நாவிலும் பதித்திருக்கும் ஹோட்டல் திருச்சி, மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ளது. அது காஞ்சனா கறி விருந்து ஹோட்டல்.
சுரேஷ்குமார், தாமோதரன் இருவரும் சகோதரர்கள். இருவரும் பட்டப்படிப்பு முடித்துவிட்டு ஹோட்டல் தொழிலில் கவனம் செலுத்துகின்றனர். சுரேஷ் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் துறையில் அனுபவம் மிக்கவர். இருவரும் இணைந்து 3 ஆண்டுக்கு முன்பு தொழில் தொடங்க வேண்டும் என்று திட்டமிடுகின்றனர். இந்நிலையில் உறவினரின் ஹோட்டலான காஞ்சனா உணவகத்தின் உட்புறத்தை நவீனப்படுத்தி உயர்தர உணவகமாக தரம் உயர்த்தி காஞ்சனா கறி விருந்து என பெயர் வைத்து நடத்தத் தொடங்கினர்.
தினமும் காலை 11 மணிக்கு தொடங்கும் உணவு விற்பனை இரவு 10.30 மணி வரை நீடிக்கிறது. காஞ்சனா உணவகத்தின் பிரியாணிக்கென்று தனி இடம் உண்டு. அத்துடன் தனக்கு என்று ஒர் தனி அடையாளத்தை கொண்டுள்ளது “காஞ்சனா ஸ்பெஷல் மீல்ஸ்”. என்ன வெறும் மீல்ஸ் தானே.. என சொல்லத் தோன்றுகிறது தானே..? ஒரு முறை சாப்பிட்டவர்கள் வாடிக்கையாளர்களாக மாறிவிடுவார்கள் அந்த அளவிற்கு அடித்து பட்டையை கிளப்புகிறது காஞ்சனா ஸ்பெஷல் மீல்ஸ்.
அப்படி அந்த காஞ்சனா ஸ்பெஷல் மீல்ஸில் என்ன இருக்கும்..?
சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணி, சூப், பார்பிக்யூ, சிக்கன் கறி, தலைக்கறி, பெப்பர் சிக்கன், சிக்கன் 65, மட்டன் சுக்கா, செட்டி நாட்டு சுக்கா, பிரான் சுக்கா, பெப்பர் சுக்கா, வறுவல், லாலிபாப், நெத்திலி ஃப்ரை, கூல்ட்ரிங்க்ஸ், ஸ்வீட் என்று இலையைப் பூர்த்தி செய்து விடுகின்றனர். இதன் விலை ரூ.599 மட்டுமே. ஒருவராக சாப்பிட்டால் இவை அனைத்தும் அன்லிமிடெட், என்பதால் இருவராக சாப்பிடவும் அனுமதிக்கிறார்கள். மேலும் காஞ்சனா கல்யாண பிரியாணி ரூ.350 மட்டுமே.
காஞ்சனா கறி விருந்தின் மற்றொரு ஸ்பெஷல். கறி தோசை. மதுரை மட்டன் கறி தோசை என்றால் அசைவ உணவுப் பிரியர்களின் நாவில் எச்சில் ஊறும். மதுரைக்காரர்கள் கூட திருச்சி வரும் போது காஞ்சனா கறி விருந்தில் கறி தோசை சாப்பிட்டுச் செல்கின்றனர். கறி தோசைகென்றே ஏராளமான வாடிக்கையாளர்கள் உண்டு.
மதியம், அசைவ உணவு ரூ.120. சைவ உணவு ரூ.95 என அனைத்து தரப்பு மக்களுக்குமான உணவகமாக காஞ்சனா கறி விருந்து திகழ்கிறது. திருமண போன்ற விசேஷ நிகழ்ச்சிகளுக்கும் சமைத்து தருகிறார்கள்.
“நாங்கள் மூன்று வேலையும் இங்கே தான் உணவு உண்கிறோம். இதன் மூலம் உணவுகளை தரம் பார்த்து, ருசி பார்த்து பக்குவமாக தயார் செய்வதில் கவனம் பெறுகிறது. சமைப்பதற்கு தேவையான உணவுகளை தினமும் காலை 4 மணிக்கு லோடு வந்து இறங்கும் பொழுதே காய்கறிகளை சுத்தமாக வாங்கி சமைக்கிறோம். கறியும் தரம் பார்த்து தினமும் ஃப்ரெஷ்ஷாக வாங்கி சமையலுக்குப் பயன்படுத்துகிறோம். மீன்களையும் அன்றன்று சந்தையில் வாங்கி சமையலுக்கு பயன்படுத்துகிறோம்.
மலேசியா ஸ்பெஷல், மதுரை ஸ்பெஷல், பள்ளிபாளையம் உணவு வகை, செட்டிநாடு உணவு வகை, சைனீஸ் உணவு வகை, தந்தூரி, பார்பிக்யூ, சவர்மா என வகை வகையான உணவுகளை வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப சுவையாக பரிமாறுகிறோம்.
காஞ்சனாவின் கறி தோசையை “சௌத் இந்தியன் பீட்சா” என்றும் சொல்கின்றனர். கறி தோசையை சட்டினி, சாம்பார் இன்றி அப்படியே சாப்பிடும் அளவிற்கு சுவையாக இருக்கும். சைவத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்கிறோம். சைவம் சமைக்க தனி பாத்திரம் உண்டு. சைவம் சமைத்த பிறகே அசைவ உணவு சமைக்கும் வேலையில் ஈடுபடுகிறோம்.
காஞ்சனா கறி விருந்து உணவை குடும்பத்துடன் வீட்டில் அமர்ந்து பொறுமையாக ருசித்து உண்ண டோர் டெலிவரி வசதியும் உள்ளது. கறி விருந்து ஆர்டர் செய்ய 86808 86800, 86808 868801, 0431-&-4030345 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.