போலி சிம்கார்டுகளை களையும் புதிய வழி..!
சிம்கார்டு வேண்டுமென்றால் ஆதார் கட்டாயம். இப்போது தான் போட்டோ எடுக்கும் நடைமுறை. முன்பு ஆதார் ஜெராக்ஸ் இருந்தால் போதும், சிம்கார்டு வாங்கிவிடலாம்.
இந்நிலையில் அது போல் உங்கள் ஆதார் ஜெராக்ஸ் பயன்படுத்தி எவரேனும் சிம்கார்டு வாங்கி பயன்படுத்தி வந்தால் அதை காட்டிக் கொடுக்கும் ஒரு புதிய தளத்தை கொண்டு வந்துள்ளது இந்திய தொலைத் தொடர்புத் துறை. Telecome analytic for fraud management and consumer protection என்ற பிரிவானது தொடங்கியுள்ள இந்த புதிய தளத்திற்குள் செல்ல tafcop.dgtelecom.gov.in என விலாசத்தை டைப் செய்யவும்.
முகப்பு பக்கத்தில் உங்கள் மொபைல் எண்ணை பதிவிடவும். தொடர்ந்து உங்கள் செல்போனுக்கு வரும் ஓடிபி எண்ணை உள்ளீடவும். இப்போது உங்கள் ஆதார் எண்ணை பயன்படுத்தி என்னென்ன எண்கள் பெறப்பட்டன என்பது கண்டறியப்படும்.
நீங்கள் தற்போது பயன்படுத்தி வரும் மொபைல் எண் உங்கள் ஆதார் எண் பதிவுடன் இணைக்கப்பட்டே செயல்பட்டு வருகிறது. இந்த அடிப்படையில் அதே ஆதார் எண்ணில் வேறு எண்கள் பெறப்பட்டிருந்தால் அவற்றை கண்டுபிடித்து சொல்லிவிடும். THIS IS NOT MY NUMBER என்ற OPTION-ஐ கிளிக் செய்தால் அந்த எண் BLOCK செய்யப்படும். இதன் மூலம் திருட்டுத்தனமாக பயன்படுத்தும் சிம் கார்டுகளை நீங்கள் தடை செய்ய முடியும்.