டுபாக்கூர் அழைப்புகளுக்கு ரூ.10,000 அபராதம்!
தினமும் உங்களது மொபைல் எண்ணுக்கு, உங்களுக்கு பிஎம்டபிள்யூ கார் பரிசு விழுந்துள்ளது…. உங்கள் நம்பருக்கு 100 கோடி ரூபாய் பரிசு விழுந்துள்ளது என்றெல்லாம் குறுந்தகவல் வரும். அத்துடன் இது போன்ற ஆசை வார்த்தைகளை கூறி மோசடி அழைப்புகளும் அதிகமாக வரும்.
இதைத் தடுக்க மத்திய தொலைத் தொடர்புத் துறை டிஜிட்டல் புலனாய்வு அமைப்பு மற்றும் தொலைத் தொடர்பு பகுப்பாய்வு என இரண்டு அமைப்புகளை நிறுவியுள்ளது. இந்த இரு அமைப்புகளும் தொந்தரவு தரும் அமைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளுக்கு ரூ.10,000 வரையில் அபராதம் விதிக்க முடிவு செய்துள்ளது. இது போன்ற குறுஞ்செய்திகள், அழைப்புகள் வரவேண்டாம் என்று நினைத்தால் 1909 என்ற நம்பருக்கு STOP என டைப் செய்து நிறுவனத்தின் பெயரையும் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். அதன் பின்னர் உங்கள் எண்ணுக்கு மீண்டும் மீண்டும் அந்நிறுவனத்திடமிருந்து அழைப்புகள், குறுஞ்செய்திகள் வராது என தொலைத்தொடர்புத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.