Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

இரண்டு பான் அட்டை வைத்திருந்தால் ரூ.10,000 அபராதம்…!

அடகு - ஏல நகையை மீட்டு மறு அடகு வைக்க - விற்க

இரண்டு பான் அட்டை வைத்திருந்தால் ரூ.10,000 அபராதம்…!

உடனுக்குடன் அங்குசம் வாட்சப் சேனலில்.. சேர.....

வங்கி கணக்கு தொடங்குவது, வருமான வரி செலுத்துவது என அனைத்திற்கும் பான் அட்டை முக்கியமான ஒன்றாகும். மோசடியில் ஈடுபவர்கள் மட்டுமே இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பான் அட்டைகளை வைத்திருப்பர். ஒன்றுக்கு மேற்பட்ட பான் அட்டை வைத்திருப்பது வருமான வரிச் சட்டத்தின்படி குற்றமாகும். இதற்கு ரூ.10,000 வரையில் அபராதம் விதிக்கப்படும். எனவே ஒன்றுக்கு மேற்பட்ட பான் அட்டை வைத்திருந்தால் உடனே அதை சரண்டர் செய்துவிடுவது நல்லது. ஆன்லைன் மூலமாகவே சரண்டர் செய்யலாம்.

வருமான வரித் துறையின் NSDL இணையதளம் சென்று, அங்கு Changes of Correction in Existing PAN Data/Reprint of PANCard என்பதைத் தேர்ந்தெடுக்க வேண்டும். புதிய படிவம் ஒன்று வரும். அதில் உங்களது பெயர், பிறந்த தேதி, முகவரி, மொபைல் நம்பர் போன்ற விவரங்களைப் பதிவிட வேண்டும். நீங்கள் சரண்டர் செய்ய விரும்பும் பான் அட்டை விவரத்தையும் குறிப்பிட வேண்டும். அந்தப் படிவத்தை submit செய்தவுடன் உங்களுக்கு ஒரு டோக்கன் நம்பர் வழங்கப்படும். அடுத்து பக்கத்தில் நீங்கள் சரண்டர் செய்யும் பான்  அட்டையின் ஸ்கேன் காப்பியைப் பதிவேற்றம் செய்ய வேண்டும்.இப்போது உங்களது பான் அட்டை சரண்டர் செய்யப்பட்டுவிடும். இதற்கான உறுதிச் செய்தி மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்தி வாயிலாக அனுப்பப்படும்.

 

 

 

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.