5 ஜிபி கடனா வேணுமா? ஜியோ தரும் எமர்ஜென்சி டேட்டா லோன்
கொரோனா தாக்கம் பள்ளிக் கூடங்களை செல் போனுக்குள் அடக்கிவிட்டது. வகுப்பறையில் (ஆன்லைன் வகுப்பு) பாடத்தை கவனித்துக் கொண்டிருக்கும் போது டேட்டா தீர்ந்து, கையில் பணமும் இல்லாமல் தடுமாறு பவர்களுக்கு தற்காலிகமாக உதவும் வகையில் ஜியோ, ‘எமர்ஜென்சி டேட்டா லோன்‘ என்ற வசதியை அமல்படுத்தியுள்ளது.
ஜியோ வாடிக்கையாளர்கள் அனைவரும், மை -ஜியோ செயலியை பயன்படுத்தி இந்தக் கடன் வசதியை பெற முடியும். இந்திட்டத்தின் கீழ் ரூ.11 மதிப்புள்ள 1 ஜிபி டேட்டாவை கடனாகப் பெற்றுக் கொள்ளலாம். அதிகபட்சமாக 5 ஜி.பி.க்கள் வரை இந்த வசதியைப் பயன்படுத்தி கடனாக ஜியோ வாடிக்கையாளர்கள் பெறலாம்.