வங்கியில் கணக்கு தொடங்குவது, டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு பெறுவது, வருமான வரி செலுத்துவது உள்ளிட்ட பரிவர்த்தனைகளுக்கும் பான் அட்டை மிகவும் அவசியமான ஒன்றாகிவிட்டது. பான் கார்டுடன் ஆதாரை இணைக்க பலமுறை மத்திய அரசு அறிவுறுத்தி வருகிறது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று பரவல் காரணமாக இணைப்பிற்கான இறுதி தேதியை நீட்டித்து நீட்டித்து தற்போது செப்டம்பர் 30 என அறிவித்துள்ளது. இந்நிலையில் உங்களிடம் உள்ள பான் அட்டை தொலைந்துவிட்டால் நீங்கள் ஆன்லைனில் இ-பான் பெற்றுக் கொள்ளலாம் என வருமான வரித்துறை அறிவித்துள்ளது.
https://www.incometax.gov.in என்ற வருமானவரித் துறையின் அதிகாரபூர்வ இணையதளத்தை லாக்-இன் செய்து ‘Instant e-PAN’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, பின்னர் New e-PAN’ என்பதை கிளிக் செய்யவும். அதில் தற்போது உங்களிடம் உள்ள பான் எண்ணை பதிவிடவும். பான் எண் மறந்துவிட்டால், ஆதார் எண்ணை பதிவிடவும். விதிமுறைகளை படித்து பார்த்து ‘Accept’ கொடுக்கவும்.
நீங்கள் பான் அட்டைக்கு விண்ணப்பிக்கும் போது பதிவு செய்யப்பட்ட உங்கள் மொபைல் எண்ணுக்கு வரும் OTP நம்பரை உள்ளிடவும். அதில் கூறியுள்ள விவரங்களை படித்து பார்த்து ‘Confirm’ கொடுக்கவும். அவ்வளவு தான்! இப்போது விண்ணப்பதாரரின் இமெயில் ஐடிக்கு இ-பான் கார்டு PDF Format-ல் அனுப்பப்படும். உங்கள் இ-பான் அட்டையை டவுன்லோடு செய்து கொள்ளலாம். இதற்கு கட்டணங்கள் ஏதும் செலுத்தத் தேவையில்லை.