Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

திருப்பித்தந்த பிஏசிஎல் பணம் : யாருக்கு லாபம்?

அடகு - ஏல நகையை மீட்டு மறு அடகு வைக்க - விற்க

பி.ஏ.சி.எல். வாடிக்கையாளர்கள் ரீஃபண்ட் தொடர்பாக எழும் சந்தேகங்களுக்கு பதில் கிடைக்கும் வகையில் ஓர் விரிவான விளக்கத்தை செபி அறிவிப்பாக வெளியிட்டது.

அறிவிப்பை முழுமையாக படித்த வாடிக்கை யாளர்கள் தங்களது பிரச்சனைக்கு தீர்வு கிடைத்துவிட்டது, விரைவில் நம்முடைய முதலீட்டை திரும்பப் பெற்றுவிடலாம் என ஒவ்வொருவருக்குள்ளும் நம்பிக்கை பிறந்தது.

தொடக்கத்தில் பிஏசிஎல்லில் ரூ.2,500 முதலீடு செய்தவர்களின் பணத்தை கொடுக்கத் தொடங்கியது. பிஏசிஎல் சொத்துக்களை விற்றதன் மூலம் கிடைத்த தொகையிலிருந்து ரூ.2,500ஐ திருப்பித் தரத் தொடங்கியது செபி. இதன் மூலம் 1,13,352 வாடிக்கையாளர்களுக்கு ரூ.2,500 பணம் திருப்பித் தந்ததாக உயர்நீதிமன்றத்தில் செபி அறிவித்தது. பின்னர் ரூ.5,000 முதலீடு செய்தவர்களின் பணத்தை கொடுக்கத் தொடங்கியது.

தொடர்ந்து ரூ.7,000 வரையில் பணம் வர வேண்டியவர்கள் விண்ணப்பிக்கலாம் என செபி அறிவித்தித்ததோடு அதற்கான கெடு தேதி 31 அக்டோபர் 2020 என கூறியது. மேலும் ஏற்கனவே ரூ.2,500, ரூ.5,000 தொகை கேட்டு விண்ணப்பித்தவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டால் அவர்களும் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்தது. இதையடுத்து ஏராளமான முதலீட்டாளர்கள் தங்கள் முதலீட்டுக் தொகையை திரும்பப் பெறத் தொடங்கினர். இவ்வாறாக சுமார் 4 லட்சம் முதலீட்டாளர்களுக்கான பணத்தை செபியின் நடவடிக்கையினால் முதலீட்டாளர்கள் திரும்பப் பெற்றனர்.

Visit Kavi Furniture and get to Know about us better. Experience our Furniture First Hand in a setting designed to feel like home

ஒருபுறம் பிஏசிஎல் நிறுவனம் தனது வாடிக்கை யாளர்களுக்கு பணத்தை திருப்பிக் கொடுத்துக் கொண்டிருந்தாலும் வாடிக்கையாளர்கள் பலருக்கும் பலவிதமான கேள்விகள் எழத் தொடங்கியது.

?              முதலீட்டாளர்கள் மாதம் ஒன்றிற்கு ரூ.2500 வீதம் ஒரு வருடத்திற்கு செலுத்தியிருந்தால் அசல் தொகையாக எதை கருத வேண்டும்.? இரண்டாயிரத்து ஐநூறு ரூபாயா முப்பதாயிரம் ரூபாயா..?

?              மாதம் ஒன்றிற்கு ரூ.330 வீதம் 12 மாதங்கள் செலுத்தியிருக்கிறேன். நான் இம்முறை பணத்தை திரும்பப் பெற தகுதி உள்ளவனா..?

?              என்னிடம் ரூ.10,000 மொத்த தொகைக்கான பிஏசிஎல் சான்றிதழ் உள்ளது. ஆனால் நான் ரூ.1,000 வீதம் இரண்டு தவணைகள் மட்டுமே செலுத்தியுள்ளேன். நான் இம்முறை பணத்தை திரும்பப் பெற தகுதி உள்ளவனா.?

?              திரும்பப் தரும் தொகைக்கான வட்டி விகிதங்கள் என்ன..?

?              பிஏசிஎல் சான்றிதழ், ஆதார் மற்றும் பான் அட்டைகளில் எனது பெயர் வெவ்வேறாக உள்ளதே..?

வேலை பெறுவது எளிது ! தலைசிறந்த வேலைவாய்ப்பு இணைதளம்

?              ஆவணங்கள் சமர்ப்பித்தபின் எனக்கு பணம் எப்போது திரும்பக் கிடைக்கும்.?

?              சிறுவர்கள் பெயரில் முதலீடு செய்திருந்தால் அவர்களின் காப்பாளர் தன்னுடைய வங்கி விவரங்களுடன் பணம் திரும்பப் பெற விண்ணப்பிக்கலாமா.?

?              பிஏசிஎல் சான்றிதழில் பெயர் உள்ள நபர் இறந்துவிட்டால் அவரால் நியமனம் செய்யப்பட்டவர் அவரின் சட்டப்படியான வாரிசு தங்களின் விவரங்களை தரலாமா..?

?              என்னிடமிருந்த மூல ஆவணங்களை ரசீதை பிஏசிஎல்லிடம் கொடுத்துவிட்டேன். என்னிடம் அதற்கான பற்றுச்சீட்டு மற்றும் ஒப்புகைச் சீட்டு மட்டுமே உள்ளது. பணம் திரும்பப் பெற நான் விண்ணப்பிக்கலாமா.?

?              பணம் திரும்ப வேண்டிய காகித விண்ணப்பத்தை நேரடியாக ஆதாரத்துடன் சமர்ப்பிக்கலாமா..?

?              என்னுடைய தாயார் பிஏசிஎல்லில் முதலீடு செய்துள்ளார். ஆனால் அவரிடம் வங்கி கணக்கு இல்லை. இந்த பரிவர்த்தனைக்கு அவர் என்னுடைய வங்கி கணக்கை உபயோகப்படுத்தலாமா..? 

இப்படி ஏராளமான கேள்விகளை வாடிக்கையாளர்கள் பிஏசிஎல் முன் வைத்தனர். அனைத்து கேள்விகளுக்கும் செபி பலவிதமாக பதில் சொன்னது. குறிப்பாக திரும்ப தரும் தொகைக்கான வட்டி விகிதங்கள் என்ன..? என்ன என்ற கேள்விக்கு, வட்டி ஏதும் தர தீர்மானிக்கப்படவில்லை என பதிலளித்தது. இது பலரையும் எரிச்சலடையச் செய்தது. என்றாலும் ஆண்டு கணக்கில் இழுக்கடிக்கப்பட்டாலும் அசலாவது திரும்பப்  கிடைக்கிறது. அது போதும் என சிலர் முன்வைத்த வாதங்கள் பலராலும் ஏற்கப்பட்டது.

அதே வேளையில் உங்களின் சந்தேகங்களுக்கு பதில் கொடுப்பவர்கள் யாரும், உங்களின் பணத்திற்கான பொறுப்பானவர்கள் அல்ல..! அவர்களும் இந்நிறுவனத்தில் செலுத்திய பணத்தை பெற காத்திருப்பவர்கள் தான்!  பணம் எப்போது வரும்” என்ற கேள்வியை முற்றிலும் தவிர்க்கவும். இதற்கான பதிலை “மாண்புமிகு உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட ஸி.வி.லோதா கமிட்டி”யால் மட்டுமே கூற முடியும் என குறிப்பிட்டது. இதன் பின்னரே கட்டிய தொகையிலிருந்து முதலில் ரூ.2,500 வரை செலுத்தியவர்களுக்கும் அதன் பின்னர் ரூ.5,000, ரூ.7,000 செலுத்தியவர்களுக்கும் பணம் திரும்பிக் கிடைக்கத் தொடங்கியது. தற்போது வரை ரூ.10,000 மற்றும் அதற்கு கீழான தொகை உள்ள முதலீட்டாளர்களுக்கு பணம் கொடுக்கப் பட்டிருக்கிறது.

இந்த அளவிலான பணம் வரவில்லையெனில் ““https://www.sebipaclrefund.co.in/Refund/Enquiry” என்ற இணைய பகுதியில் உங்களின் தகவலை பதிவிட்டு, CLAIM Status”ஐ கவனிக்கவும். உங்களின் முதலீட்டு பணம் சம்மந்தமான புகாரை (PACL விஷயத்தில்) nodal officer’‚க்கு nodalofficerpacl@sebi.gov.in  மற்றும்committeepacl@sebi.gov.in என்ற mail id மூலம் மெயில் பதிவு செய்யவும்.

உங்கள் PACL பணம் பிரச்சனை சம்மந்தமாக மாண்புமிகு. உச்ச நீதிமன்றத்திற்கு mail மூலமாக புகார் அளிக்க “mailto:supremecourt@nic.in என்ற இணையதளத்தில் பதிவிடலாம் என குறிப்பிட்டது. பிஏசிஎல்லில் முதலீடு செய்தவர்களின் பணம் திரும்பக் கிடைத்து வருகிறது. இது யாருக்கு லாபம்..?

அடுத்த இதழில் நிறைவு பெறும்

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.