ஸ்ரீ ராம் சந்திராஜயின் 150 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு வெளியிட் புழக்கத்தில் இல்லாத நாணயம் !
ஸ்ரீ ராம் சந்திராஜயின் 150 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு வெளியிட் புழக்கத்தில் இல்லாத நாணயம் குறித்த சிறப்பு சொற்பொழிவு!
திருச்சிராப்பள்ளி நாணவியல் கழகம் சார்பில் ஸ்ரீ ராம் சந்திராஜயின் 150 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு வெளியிட்ட புழக்கத்தில் இல்லாத நாணயம் குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி திருச்சியில் நடைபெற்றது திருச்சிராப்பள்ளி நாணயவியல் கழக தலைவர் சார்லஸ் தலைமை வகித்தார் துணைத் தலைவர் கமலக்கண்ணன் முன்னிலை வகித்தார்.
ஸ்ரீ ராம் சந்திராஜயின் 150 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு வெளியிட்ட
புழக்கத்தில் இல்லாத நாணயம் குறித்து நாணயவியலாளரும் அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலருமான யோகா ஆசிரியர் விஜயகுமார் பேசுகையில், ஸ்ரீ ராம் சந்திரா ஜியின் 150வது பிறந்தநாளை முன்னிட்டு இந்திய ரூபாய் நூற்றி ஐம்பது மதிப்பில் புழக்கத்தில் இல்லாத நாணயம் வெளியிடப்பட்டுள்ளது. (.500)வெள்ளி கலவையில் 35 கிராம் எடையில்
44 மி.மீ விட்டத்தில் வடிவம் சுற்று வடிவத்தில் புழக்கத்தில் விடப்படாத நினைவார்த்த நாணயமாக வெளியிடப்பட்டுள்ளது.
நாணய முகப்பில் அசோக சிங்கம் சின்னம் மற்றும் கீழே ரூபாய் சின்னமும்
பாரத இந்தியா சத்யமேவ ஜெயதே ₹ 150 எழுத்தும் இடம் பெற்றுள்ளது.
பின்புறம் ஸ்ரீ ராம் சந்திர ஜியின் மார்பளவு சிலை உருவத்துடன் ஆதி குரு ஸ்ரீ ராமசந்த் ஜி 150 ஜெயந்தி , ஸ்ரீ ராமச்சந்திர மிஷன் ஹிந்தி மற்றும் ஆங்கில எழுத்தும் ஆண்டும் பொறிக்கப்பட்டுள்ளது என்றார். நாணயவியல் சேகரிப்பாளர்கள் நாசர், மகராஜா, அபய்குமார், முத்து மணிகண்ட கார்த்திகேயன், ராஜ்குமார், குணசேகரன், சந்திரசேகரன், இளங்கோவன், ரவீந்திரன் உட்பட பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.