வங்கிகளுக்கு இந்த மாதம் 15 நாள் லீவு!
ஏப்ரல் 14ம் தேதி அம்பேத்கர் பிறந்த நாள் மற்றும் தமிழ்ப் புத்தாண்டு காரணமாக விடுமுறை அளிக்கப்படும். ஏப்.15ம் தேதி விஷு/போஹாக் பிஹு/ஹிமாச்சல் தினம்/வங்காள புத்தாண்டு தினம், ஏப்.18ல் ஷப்-ல்-கதர், ஏப்.21 கரியா பூஜை/ஜுமாத்-உல்-விடா காரணமாகக் குறிப்பிட்ட மாநிலங்களில் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும். அதேபோல ஏப்.22ம் தேதி ரம்ஜான் பண்டிகை காரணமாக வங்கிகளுக்கு விடுமுறை விடப்படுகிறது.
முக்கிய அறிவிப்பு இது தவிர அனைத்து ஞாயிற்றுக்கிழமைகள் மற்றும் 2வது சனிக்கிழமைகளில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும். இப்படி மொத்தம் இந்த மாதம் மட்டும் 15 நாட்கள் வங்கிகள் மூடப்பட்டிருக்கும். இதனால் வங்கிகளுக்குச் செல்லத் திட்டமிடும் வாடிக்கையாளர்கள் அதற்கேற்ப தங்கள் பணிகளைத் திட்டமிட்டுக்கொள்ளலாம்.
அதேநேரம் மேல் கூறப்பட்டுள்ள சில விடுமுறை நாட்கள் மாநிலங்களைப் பொறுத்து மாறும் என்பதால் வங்கி செல்லும் முன்பு ஆர்பிஐ தளத்திலும் இது குறித்துச் சரிபார்த்துக்கொள்ளலாம்.