ஆதாருடன் இணைக்காவிட்டால் பணம் எடுக்க முடியாது..!
தொழிலாளர் சேமநல நிதி கணக்குடன் ஆதார் எண் இணைப்பதற்கான கால வரம்பு செப்டம்பர் முதல் தேதி வரை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் யுஏஎன் என்ற ஒருங்கிணைந்த கணக்கு எண்ணுடன் ஆதார் எண்ணை செப்டம்பர் முதல் தேதிக்குள் தொழிலாளர்கள் இணைக்க வேண்டும் என்றும், செப்டம்பர் முதல் தேதிக்குள் ஆதார் இணைக்கப்படாத இபிஎப் கணக்கில் சந்தா செலுத்த முடியாது என்றும், கணக்கில் இருந்து தொழிலாளர் பணம் எடுக்க முடியாது என்றும் இபிஎப் அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஆன்லைன் மூலம் அல்லது இபிஎப் அலுவலகத்துக்கு நேரில் சென்று ஆதார் எண்ணை தொழிலாளர்கள் இணைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.