அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான “இ-ஷ்ரம் போர்ட்டல்”
இந்தியப் பொருளாதார வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் குறித்த தகவல்கள், புள்ளி விபரங்கள் இல்லாத காரணத்தால் அவர்களுக்கான மேம்பாடுகள் குறித்த திட்டங்களை வகுப்பதில் தொய்வு ஏற்படுகிறது. இந்நிலையை களைய இ-ஷ்ரம் என்ற போர்டலை உருவாக்கியுள்ளது.
இந்த போர்ட்டலில் 38 கோடி அமைப்பு சாரா தொழிலாளர்களைப் பதிவு செய்ய இலக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்த போர்ட்டலுடன் 14434 என்ற டோல் ஃபிரீ நம்பரும் தொடங்கப்பட்டுள்ளது. தொழிலாளர்கள் தங்களது ஆதார் எண், வங்கிக் கணக்கு ஆகிய விவரங்களை இந்த போர்ட்டலில் பதிவு செய்ய வேண்டும். இன்னும் பல அம்சங்கள் இந்த போர்ட்டலில் உள்ளன.