தேசிய விருது பெறும் ஜி.ஆர்.டி. ஜுவல்லர்ஸ்
“பிளாட்டினம் கில்டு இன்டர்நேஷனல்” என்ற அமைப்பால், பிளாட்டினம் நம்பிக்கை காலம்(பிளாட்டினம் சீசன் ஆப் ஹோப்) என்ற தலைப்பில் நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்ச்சியில்,
ஜி.ஆர்.டி. ஜுவல்லர்ஸ் நிறுவனத்தின் கோட்ஸ் ரோடு ஷோரூமுக்கு தேசிய அளவில் விருது வழங்கப்பட்டு இருக்கிறது. இதேபோல் தென்மண்டல வெற்றியாளராக ஜி.ஆர்.டி. ஜுவல்லர்ஸ் நிறுவனத்தின் உஸ்மான் சாலை ஷோரூம் அறிவிக்கப்பட்டது.
இதுமட்டுமின்றி, தேசிய அளவில், மற்றும் தென்மண்டல அளவில் சிறந்த விற்பனை மேலாளர்களாக ஜி.ஆர்.டி. ஷோரூம் மேலாளர் தேர்வு செய்யப்பட்டு இருக்கின்றனர்.
அத்துடன் தொடர்ந்து 4-வது ஆண்டாக தேசிய அளவில் மற்றும் தென்மண்டல அளவில் சிறந்த விற்பனை மேலாளர்களாக ஜி.ஆர்.டி. ஷோரூம் தேர்வாகியுள்ளது.