பிசினஸ் திருச்சி வாசகர் விமர்சனங்கள்…
ஆகஸ்ட் 16&-31 பிசினஸ் திருச்சி இதழ் படித்தேன். ரசித்தேன். நிதிநிலை அறிக்கையின் நம்பிக்கை தரும் தொழில்துறை பற்றிய தலையங்கச் செய்தி கள் அருமை. பிஏசிஎல் வீழ்ந்த வரலாறு தொடர்நிறைவுற்றாலும் பணம் செலுத்தியவர்களுக்கு ஆறுதலும், அறிவுரையாகவும் அமைந்தது சிறப்பு. இளைஞர்கள் தொழில்முனைவோராக வழிகாட்டி நிகழ்ச்சி விடியலைக் காட்டும் விடிவெள்ளி. மதிப்பிற்குரிய திருமதி கேத்தரின் சிறப்புப் பேட்டி இதழுக்குப் பெருமை சேர்த்துள்ளது. மொத்தத்தில் பிசினஸ் திருச்சி இதழ் திருச்சியைப் படம் பிடித்துக் காட்டும் மலைக்கோட்டை ஒளிவிளக்காகத் தொடர்ந்து வளரட்டும்..!
-புலவர் தியாகசாந்தன், திருச்சி
தமிழக அரசின் 2021 – 2022 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் உள்ள தொழில்துறைக்கு நம்பிக்கை தருவதாக இருக்க கூடியவற்றை பிசினஸ் திருச்சி தனித்து காட்டியிருப்பது சிறப்பு..!
– பிரின்ஸ், அரியமங்கலம்
கண்கவர் பக்கங்கள், படிக்கத் தூண்டும் தலைப்புகள், ஏராளமான செய்திகள்…. திருச்சிக்கான பிசினஸ் வாய்ப்புகளை காட்டுகிறது பிசினஸ் திருச்சி..!
– ரவி ராம், உறையூர்
பிசினஸ் திருச்சி இதழில் வெளியான பிஏசிஎல் வீழ்ந்த வரலாறு தொடர் சுருக்க மாகவும், தெளிவாகவும் அமைந்தி ருந்தது.
– சக்தி, உறையூர்
‘மூன்றாம் கால்’ பகுதிக்கு அருமை யான முன்னோட்டம் கொடுத்து அழகான பதிவுகளை காட்சிப்படுத்தியிருக்கும் பிசினஸ் திருச்சியின் சிறப்பு பக்கமான என் திருச்சி தடம் பக்கம் வெகு சிறப்பு வாழ்த்துக்கள்!
-சபீர் வரகனேரி