திருச்சியில் கட்டட வழிகாட்டி மதிப்பு உயர்வுஉடனே உயர்ந்தது முத்திரை தீர்வு கட்டணம்வீட்டுவாடகை உயர்கிறதா..?
திருச்சியில் கட்டட வழிகாட்டி மதிப்பு உயர்வுஉடனே உயர்ந்தது முத்திரை தீர்வு கட்டணம் வீட்டுவாடகை உயர்கிறதா..?
தமிழகத்தில் புதிதாக நிலங்களுக்கான புதிய வழிகாட்டி மதிப்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கான்கிரீட் கூரை அமைக்கப்பட்டுள்ள கட்டிடத்துக்கு தரை தளம் சதுர மீட்டருக்கு ரூ.8,980, முதல் தளத்துக்கு சதுர மீட்டருக்கு ரூ.8,325, 2ம் தளத்திற்கு சதுர மீட்டருக்கு ரூ.8475, அதற்கு மேல் ஒவ்வொரு தளத்துக்கும் சதுர மீட்டருக்கு ரூ.127 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில், சிறப்பு, சாதாரண, அடுக்கு மாடி, வணிகம், மருத்துவமனை கட்டிடம் என வகைப்படுத்தப்பட்டு, அதன்படி மதிப்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
நிர்ணயிக்கப்பட்டுள்ள இந்த வழிகாட்டி மதிப்பு பழைய மதிப்புடன் ஒப்பிடும் போது சென்னையை தவிர்த்து திருச்சி, தஞ்சை, மதுரை உள்ளிட்ட மாநகராட்சி பகுதிகளில் 15 சதவீதம், நகராட்சி பகுதிகளில் 5 சதவீதம், கொடைக்கானல், நீலகிரி, ஊட்டி போன்ற மலைப்பிரதேசங்களில் 15 சதவீதமும் என கூடுதலாக மதிப்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய மதிப்பீடு உடனடியாக அமலுக்கு வந்ததை அடுத்து முத்திரை தீர்வை கட்டணமும் உயர்ந்துள்ளது.