ஜோசப் கண் மருத்துவமனையின் அதிநவீன நுண்துளை அறுவை சிகிச்சை
ஜோசப் கண் மருத்துவமனையின் அதிநவீன நுண்துளை அறுவை சிகிச்சை MICS கண்புரை அறுவை சிகிச்சை (Cataract Surgery) என்பது கண்ணில் உருவாகிய பார்வை மறைக்கும் புரையோடிய இயற்கையான படிகவில்லையை (கண்புரை – Cataract) நீக்கும் மருத்துவ செயல்முறையாகும். இச்சிகிச்சையின் போது, புரையமைந்த வில்லை நீக்கப்பட்டு, செயற்கை வில்லை அல்லது ஐ.ஓ.எல் (IOL-Intraocular Lens) பொருத்தப்படுகிறது .
வீடியோ லிங்:
திருச்சியிலேயே என்.ஏ.பி.எச். (NABH Full Accreditation) முழுமையான தரச் சான்றிதழ் பெற்ற முதல் கண் மருத்துவமனையான, ஜோசப் கண் மருத்துவமனையில், உலகத்தரம் வாய்ந்த Centurion Phaco Machine உபயோகித்து, 1.8 – 2.2 மில்லி மீட்டர் துவாரத்தின் வழியே செய்யப்படும் எம்.ஐ.சி.எஸ் (MICS-micro incision cataract surgery) செய்யப்படுகிறது. உலகத்தரம் வாய்ந்த monofocal, multifocal மற்றும் Toric IOL பொறுத்தப்படுகின்றன.
இந்த அதிநவீன எம்.ஐ.சி.எஸ் அறுவை சிகிச்சைக்கு பின், நோயாளிகள் அதிக நாட்கள் ஓய்வெடுக்க தேவையில்லை. சிகிச்சை செய்த அன்றே வீடு திரும்பலாம். ஓரிரு நாட்களிலேயே தொலைக்காட்சி பார்ப்பது, கணினியில் வேலை செய்வது, புத்தகம் படிப்பது மற்றும் பிற இயல்பான வேலைகள் செய்வதை மேற்கொள்ளலாம். கண்ணில் எரிச்சலோ நீர் வடிவதோ ஏற்படாது. எட்டப்பார்வைக்கு பெரும்பாலும் கண்ணாடி அணிய வேண்டிய தேவை இருக்காது.
கிளாக்கோமா கண் அழுத்த நோயான கிளாக்கோமா (Glaucoma) என்பது கண்ணிலுள்ள சராசரி நீர் அழுத்தமான 10 முதல் 21 னீனீபிரீயை விட கூடுதலாகி, அதனால் ஏற்படும் கண்ணின் பார்வை நரம்பின் பாதிப்பே ஆகும். இந்நோயினால் சிலர் பார்வையை இழந்தும் வருகிறார்கள்.
வீடியோ லிங்:
கண் பார்வையில் தொடர்ந்து மாற்றம் ஏற்படுவதால் அடிக்கடி கண்ணாடி மாற்றுதல், காட்சிக் களத்தில் (Visual field) ஏற்படும் குறைபாடுகளால், நடக்கும் போது பக்கவாட்டில் இடித்துக்கொள்ளுதல், வாகனம் ஓட்டும்போது சுற்றுப்பார்வை தெரியாமல் இருத்தல் போன்ற பாதிப்புகள் ஏற்படும்.
50 வயதுக்கு மேற்பட்டவர்கள், கிளாக்கோமாவால் பாதிக்கப்பட்ட குடும்ப பின்னணி கொண்டவர்கள், சர்க்கரை நோய், ஒற்றை தலைவலி, குறைந்த ரத்த அழுத்தம் உள்ளவர்கள், புகைப்பிடிப்பவர்கள், ஸ்டீராய்டு சொட்டு மருந்து அதிக நாட்கள் பயன்படுத்துபவர்கள் இவர்களுக்கெல்லாம் கிளாக்கோமா ஏற்பட வாய்ப்பு உள்ளது.
கிளாக்கோமாவை ஆரம்பக் கட்டத்திலேயே கண்டுபிடிக்க Humphrey field Analyser மற்றும் OCT RNFL போன்ற அதிநவீன இயந்திரங்கள் ஜோசப் கண் மருத்துவமனையில் உள்ளன. 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் வருடம் ஒரு முறையாவது கண் மருத்துவரை அணுகி, பரிசோதனை செய்வது அவசியம்” என்கிறார் திருச்சி ஜோசப் கண் மருத்துவமனையின் கிளாக்கோமா ஸ்பெசலிஸ்ட் மருத்துவர் அர்ச்சனா தெரசா.