10 மாதத்தில் அழிக்கப்பட்ட 1700 சரக்குகள்
இறக்குமதிக்கு தடை செய்யப்பட்ட ரசாயனங்கள், எலக்ட்ரானிக் கழிவுகளை சுங்கத்துறை தொடர்ந்து அழித்து வருகிறது. இதற்காக சுங்கத்துறையில் தனிப்பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது. 1962ம் ஆண்டு சுங்கச் சட்டம் 110வது பிரிவின் 1ஏ உட்பிரிவுப்படி, அபாயகரமான பொருட்களை வழக்குகளின் தீர்ப்புக்கு முன்பே அழிக்க முடியும்.
அதன்படி கடந்த ஜனவரி மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை 1,700க்கும் மேற்பட்ட சரக்குகளை சுங்கத்துறை அழித்துள்ளது. அபாயகரமான சரக்குகளை பாதுகாப்பாக அழிக்கும் நடைமுறையை தொடர்ந்து கண்காணித்து, விரைவுபடுத்த வேண்டும் என மத்திய நிதியமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.