ஏற்றுமதி வியாபாரம் குறித்த தகவல்கள்
வெளிநாட்டுக்குபொருட்களைஏற்றுமதிசெய்யவேண்டும் எனநீங்கள் விரும்பினால் முதலில் நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டியது பொருள் தேர்வு. ஒரு பொருளைப் பற்றி தெளிவாகஅக்குவேறு ஆணிவேராக தெரிந்திருக்க வேண்டும்
அந்தப் பொருளையே நீங்கள் ஏற்றுமதிக்கும் தேர்ந்தெடுக்கவேண்டும். பொருளின் தரம் உற்பத்தி போன்ற பல்வேறு விஷயங்களை உங்களோடு இறக்குமதியாளர்கள் பேசும்போது நீங்கள் சிறிதுயோசித்தால் கூட அவர்கள் உங்களுக்கு ஆர்டர் கொடுக்காமல் போவதற்கான வாய்ப்பு உண்டு.
ஒவ்வொரு இறக்குமதியாளரும் பொருளைப் பற்றிய அனைத்து விவரங்களையும் விரல்நுனியில் வைத்திருப்பார் பல்வேறு நாடுகளில் அந்த பொருள் எந்தக் காலத்தில் என்ன விலை கிடைக்கிறது என்பதையும் தெரிந்து வைத்திருப்பார். ஆகவே பொருளுக்கான விலை குறிப்பிடுவது மிகவும் முக்கியம். அதிகமாக இருந்தால் ஆர்டர் கிடைக்காது; குறைவாக இருந்தால் நஷ்டம் ஏற்படும். இறுதியாக நேரம். ஏற்றுமதியில் காலம் தவறாமை என்பது மிகவும் முக்கியம் சரியான நேரத்திற்கு பொருட்களைஅனுப்பவேண்டியது ஒரு இறக்குமதியாளர் எதிர்பார்க்கும் பல்வேறு விஷயங்களில் முக்கியமான ஒன்று.
விவசாயபொருட்களை வெளிநாட்டுக்கு நீங்கள் அதிகஅளவில் ஏற்றுமதி செய்வதற்கானவாய்ப்பு உள்ளது. குறிப்பாக சொல்லவேண்டுமென்றால் வளைகுடா நாடுகள் இந்தியாவில் இருந்து குறிப்பாகதமிழகம் மற்றும் கேரளாவில் இருந்து அதிக அளவில் காய்கறிகளை வாங்குகின்றனர். இந்த காய்கறிகள் அனைத்தும் விமானம் மூலம் பல்வேறு வளைகுடா நாடுகளுக்கு அனுப்பப்படுகின்றன. அங்கு உள்ள வணிக வளாகங்களில் வாரம்தோறும் வெள்ளிக்கிழமை அன்று மக்கள் திரளாக வந்து பல்வேறு பொருட்களை வாங்கிச்னீ செல்கின்றனர்.
நமது ஊரைப்போல அங்கு ஞாயிற்றுக்கிழமை விடுமுறை அல்ல மாறாக வெள்ளிக்கிழமை விடுமுறை.வெள்ளிக்கிழமை வியாபாரத்தை கணக்கிட்டு புதன் அல்லது வியாழக்கிழமை அன்று உங்களை இறக்குமதியாளர்கள் சரக்குகளை அனுப்பச்சொல்லி பணிப்பார். கொச்சி, திருச்சி மற்றும் சென்னை விமான நிலையங்களில் புதன்கிழமை மற்றும் வியாழக்கிழமைஅன்று நீங்கள் சென்றுபார்த்தால் கார்கோ பகுதியில் மிக அதிக அளவிலான விவசாயபொருட்கள் அரபு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதை கண்கூடாக பார்க்கலாம்.
அது மட்டுமல்லாமல் இந்தியாவில் இருந்து தேங்காய், வெங்காயம் போன்ற பொருட்களை கன்டெய்னர் கணக்குகளில் அரபுநாட்டு இறக்குமதியாளர்கள் இறக்குமதி செய்கின்றனர்.
இதுபோன்று கன்டெய்னர்களில் கொண்டு வரப்படும் பொருட்களை அங்கு கமிஷன்அடிப்படையில் பல்வேறு இறக்குமதியாளர்கள் ஏல முறையில் விற்று தங்களுக்கான கமிஷனை எடுத்துக்கொண்டு ஏற்றுமதியாளர்களுக்கு மீதி பணத்தை அனுப்புகின்றனர் இதுபோன்று வியாபாரம் செய்யும்போது நமக்கு லாபம் வரலாம் நஷ்டமும் வரலாம் கண்டிப்பாக லாபம்வரும் என்று அறுதியிட்டு சொல்லமுடியாது.