ரூ.2000 நோட்டை காணோம்..!
2018ம் ஆண்டு மார்ச் மாதத்தில் 336.3 கோடி என்ற எண்ணிக்கையில் 2000 ரூபாய் நோட்டுக்கள் இருந்தன. இது அப்போது புழக்கத்தில் இருந்த ரூபாய் நோட்டுக்களின் எண்ணிக்கையில் 3.27 சதவீதமாகும். ஆனால் இந்த ஆண்டு நவம்பரில் 223.3 கோடி என்ற எண்ணிக்கையில் தான் 2000 ரூபாய் நோட்டுக்கள் உள்ளன. இது இப்போது புழக்கத்தில் உள்ள ரூபாய் நோட்டுக்களின் எண்ணிக்கையில் 1.75 சதவீதமாகும்.
இது குறித்து மத்திய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சௌத்ரி மாநிலங்களவையில் கூறும் போது, “2018-2019 ஆம் ஆண்டில் இருந்து புதிதாக ரூ.2,000 நோட்டுக்ககள் அச்சடிக்கப்படவில்லை. எனவே புழக்கத்தில் இருந்து அந்த நோட்டுக்கள் குறைந்துள்ளன. அதிகம் சிதைந்துவிடுவது, அழுக்காகி விடுவது போன்ற காரணங்களால் வங்கிகளுக்கு வரும் பழைய நோட்டுகள் மீண்டும் புழக்கத்திற்கு விடப்படுவதில்லை என்றார்.