பள்ளிக்கூடத்துக்கு செல்போன் எடுத்து வரக் கூடாது என பள்ளிகள் அறிவித்த நிலை மாறி கொரோனாவால் பள்ளிக்கூடமே செல்போனுக்குள் வந்துவிட்டது. ஆட்டோவில் போய் அட்டன்டன்ஸ் போடாமல் வீட்டிலிருந்தே ‘ப்ரசன்ட் மிஸ்’ சொல்ல வீட்டுக்கு வீடு செல்போன் கட்டாயமாகிவிட்டது.
இதுவே ஸ்மார்ட்போன் கம்பெனிகளுக்கு அடை மழை காலம்.
இந்தியாவில் ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பரில் மட்டும் கிட்டத்தட்ட 5 கோடி ஸ்மார்ட்போன்கள் விற்றுத்தள்ளியுள்ளன மொபைல் தயாரிப்பு நிறுவனங்கள். 1.31 கோடி மொபைல்களை விற்று ஸியோமி நிறுவனம் சந்தையில் முதலிடத்தைப் பெற்றுள்ளது.
1.02 கோடி மொபைல்களை விற்ற சாம்சங் நிறுவனம் 2ம் இடத்தில்.
விவோ, 80.8 லட்சம் மொபைல்களையும், ரியல்மீ 80.7 லட்சம் மொபைல்களையும் ஓப்போ 60.1 லட்சம் மொபைல்களையும் விற்றுள்ளன.
ஆப்பிள் நிறுவனமும் இந்தியாவில் கிட்டதட்ட 8 லட்சம் மொபைல்களை விற்றுள்ளன. ஏறக்குறை அனைத்து நிறுவனங்களுமே மூன்றாம் காலாண்டில் அதிகளவு மொபைல்களை விற்பனை செய்துள்ளன.
இணையச் சந்தைகள் தான் இதில் அதிகப் பலனடைந்துள்ளதாக கேனலிஸ் நிறுவன அதிகாரி அத்வைத் தெரிவித்திருக்கிறார். இந்தியாவில் மொபைல் சேவை நிறுவனங்கள் இன்னும் 5ஜிக்குத் தயாராகவில்லை என்பதால் ஐபோன் 12-ன் விற்பனை மந்தமாகவே உள்ளது. அத்துடன் விலையும் அதிகம் என்பதால் விற்பனை குறைந்து காணப்படுவதாக அத்வைத் கூறுகிறார்.
ஸ்மார்ட்போனையே வட்டிக்கு தான் வாங்குகிறோம்.. இதில் எங்க ஐபோன்..!?