டிவிஎஸ் நிர்வாக இயக்குனராக சுதர்சன் வேணு கோபால் நியமனம்:
2014 இல் TVS நிறுவனத்தின் இணை நிர்வாக இயக்குனராக நியமிக்கப்பட்ட சுதர்சன் வேணு, சில முக்கிய கையகப்படுத்துதல்கள் மற்றும் குழும நிறுவனங்களின் விரிவாக்கத்திற்கும் தலைமை தாங்கியுள்ளார்.
இந்நிலையில், டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் மே 5 முதல் அதன் நிர்வாக இயக்குநராக சுதர்சன் வேணுவை நியமித்துள்ளது. இவரது நியமனம் உடனடியாக அமலுக்கு வருவதாக டிவிஎஸ் மோட்டார் தலைவர் ரால்ஃப் டைய்டர் செப்த் வெளியிடுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.