திருச்சி இமை மருத்துவமனையில் மாபெரும் மருத்துவ முகாம்!
திருச்சி கே.கே.நகர் உடையார்பட்டி பேருந்து நிறுத்தம் எதிரில் அமைந்துள்ள இமை பொது மற்றும் கண் மருத்துவமனையில் (28/5/2022) இன்று மாபெரும் பொது மருத்துவ முகாம் மற்றும் இலவச கண்பரிசோதனை முகாம் நடைபெற்றது.
பொது மருத்துவ முகாம் காலை 10 மணி முதல் மதியம் 1 மணிவரை நடைபெற்றது. மற்றும் இலவச கண்பரிசோதனை முகாம் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற்றது. பொதுமருத்துவ முகாமில் ரத்த சர்க்கரை அளவு கண்டுபிடித்தல், ரத்த அழுத்த பரிசோதனை, இதய படச்சுருள் ஆகியவை மேற்கொள்ளப்பட்டது.
இலவச கண்பரிசோதனை முகாமில் கிட்டப்பார்வை, தூரப்பார்வை, தலைவலி குறைபாட்டிற்கு கம்ப்யூட்டர் மூலம் நவீன கண்பரிசோதனை செய்து கண்ணாடிகள் வழங்கப்பட்டது. இம்மிகாமில் கண்ணாடிகளுக்கு 50% தள்ளுபடியும் வழங்கப்பட்டது. மேலும் கண்புரை அறுவை சிகிச்சைக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
இந்த மருத்துவ முகாமிற்கான ஏற்பாடுகளை மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர்கள் நாகூர் கனி, முகம்மது சம்சுதீன் தலைமையில் பணியாளர்கள் செய்திருந்தனர். இம்மருத்துவமுகாமில் டாக்டர் D.பிரகாசம் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்தார். இம்முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு. பலனடைந்தனர்.
இதனைத்தொடர்ந்து, இமை மருத்துவமனை நாளை ஞாயிற்றுக்கிழமை (29.05.2022) மகளிருக்கான சிறப்பு மருத்துவ முகாமினை ஏற்பாடு செய்துள்ளது. இம்மிகாமில் பெண்களுக்கான தாய் சேய் நலம் பற்றிய மகப்பேறு மருத்துவரின் ஆலோனைகள் வழங்கப்படவுள்ளது.
கர்ப்பிணிப் பெண்களுக்கான ஸ்கேன் வசதி, இரத்த பரிசோதனை, சத்து குறைபாட்டிற்கான சிகிச்சை, மார்பக பரிசோதனை, கர்பப்பை கோளாறுக்கான சிகிச்சை மற்றும் ஸ்கேன், கர்பப்பை வாய் புற்றுநோய்க்கான சிகிச்சைகள் வழங்கப்படவுள்ளது.
இம்மிகாமில், மகளிர் நல சிறப்பு மருத்துவர் A.K.சித்ரா சிகிச்சை மற்றும் ஆலோசனைகள் வழங்குவார். இதில், மகளிர் கலந்து கொண்டு பயன் அடையலாம்.
மேலும், முகாம் குறித்த சந்தேகங்களுக்கு, 0431-3500389, 9789667773, 9789667774 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.