கம்பம், லோயர்கேம்ப் பெரியாறு மின்சார உற்பத்தி நிலையத்தில் 69 நாள்களுக்குப் பிறகு மின் உற்பத்தி தொடங்கியது.
முல்லைப் பெரியாறு அணையில் மழை பெய்யாததால், அணைக்கும் தண்ணீர் வரத்து குறைந்தது. இதனால் கடந்த மார்ச் 19 ஆம் தேதி அணையிலிருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது,
ஜுன்-1-ம் தேதி கம்பம் பள்ளத்தாக்கு முதல் போக சாகுபடிக்காக அணையிலிருந்து தண்ணீர் வினாடிக்கு 300 கன அடியாக திறந்து விடப்பட்டது.
இந்த தண்ணீர் மூலம் லோயர் கேம்ப் பெரியாறு மின்சார உற்பத்தி நிலையத்தில் உள்ள நான்கு மின்னாக்கிகளில், ஒரு மின்னாக்கி மட்டும் இயக்கப்பட்டு, 27 மெகாவாட் மின்சார உற்பத்தி ஜுன்-1 முதல் தொடங்கியது.