Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

திருச்சியில் ஜப்பானிய தயாரிப்பு பொருள்களுக்கென பிரத்யேக ஷோரூம்!

அடகு - ஏல நகையை மீட்டு மறு அடகு வைக்க - விற்க

திருச்சியில் ஜப்பானிய தயாரிப்பு பொருள்களுக்கென  பிரத்யேக ஷோரூம்!

A ஸ்கொயர் எண்டர்பிரைசஸ் நிறுவனம் ஜப்பானிய தயாரிப்பு வீட்டு உபயோகப் பொருட்களுக் கென தனி விற்பனை மையத் தினை நடத்துகிறது.
சென்னை, பெங்களூர், கோவை போன்ற பெருநகரங்களை தொடர்ந்து திருச்சியில் தில்லைநகர் சாஸ்திரி சாலையில் தொடங்கப்பட்டுள்ளது.

பிசினஸ் டிவி செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள

ஜப்பானிய தயாரிப்புகளான காஸ்மெட்டிக்ஸ், டாய்ஸ், டிரிம்மர்ஸ், கைப்பைகள், பரிசுப் பொருட்கள், வாசனை திரவியங் கள், அலங்கார பொருட்கள், தரை விரிப்புகள் மிதியடிகள், எலக்ட்ரானிக் பொருட்கள், கீ செயின்கள், ஹெட்ஃபோன்கள் என சுமார் 100 வகையான பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது.

இப்புதிய ஷோரூமை திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இதில் முன்னாள் எம்எல்ஏக்கள் RV சிவபதி, குளித்தலை அமர், தொழிலதிபர் ராக்கப்பன், மெடிக்கல் அசோசி யேஷன் சங்கத்தலைவர் மனோகர், அட்வகேட் மோகன்தாஸ், வாளாடி சிவா, பரதன் பிலிம்ஸ் RV ராம் பிரபு உள்ளிட்ட பலரின் வாழ்த்துக்களுடன் தொடங்கிய இதன் விற்பனையை உரிமை யாளர்கள் தீபக் ராஜா, அழகு ராஜா உட்பட இயக்குனர்கள் திறம்பட நிர்வகித்து வருகின்றனர்.

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.