திருச்சி ஸ்ரீ ஸ்வாகதம் E-பைக்ஸ் ஷோரும் சார்பில் மின்சார வாகனத்திற்கான தனி சர்வீஸ் பிரிவு!
ஜப்பான் தொழில் நுட்பத்தில் தயாரான ஓகினாவோ (OKINAWA) மின்சார இருசக்கர வாகனம் 100 சதவீத இந்திய மின்சார இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனம். 2015-ல் வருங்கால தலைமுறைக்கு மலிவுவிலையில், சுற்றுச்சூழல் நட்பு தொழில்நுட்பத்தின் அளவுகோலாக கொண்டு உருவாக்கப்படுகிறது.
திருச்சி கண்டோன்மெண்ட் பகுதியில் கோர்ட் எதிர்புறம் உள்ள ஸ்ரீ ஸ்வாகதம் ணி-பைக்ஸ் நிறுவனம் அங்கீகாரம் பெற்ற மெயின் டீலராவார்கள். இங்கு சராசரி பிரிவில் 3 வகை மின்சார ஸ்கூட்டர்கள் மற்றும் லைசன்ஸ் தேவைப்படாத 2 வகை வாகனம் விற்பனை செய்யப்படுகிறது.
ரூ.68 ஆயிரத்தில் இருந்து 1 இலட்சத்தி 24 ஆயிரம் ரூபாய் வரை விற்பனையில் பல்வேறு வகையான சக்தி கொண்ட ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்படுகிறது. குறைந்த வட்டியில் எளிய பைனான்ஸ் வசதி செய்து தரப்படுகிறது. பழசுக்கு புதுசு என்ற எக்ஸ்சேஞ்ச் வசதி, உடனடி டெலிவரி என பல சலுகைகளுடன் விற்பனை செய்து வருகின்றனர்.
இதுகுறித்து, நிர்வாகி கூறும் போது, சுமார் 15 ஆண்டு காலம் பெட்ரோல் இருசக்கர வாகனம் விற்பனை செய்து வந்த நாங்கள், நவீன கால மாற்றத்திற் கேற்ப எலெக்ரிக் ஸ்கூட்டர் விற்பனையை தொடங்கியுள்ளோம். உயரிய தொழில் நுட்பத்துடன் கூடிய ஓகினாவோ வகை ஸ்கூட்டர்கள் எந்த இடத்திலும் சார்ஜ் செய்து கொள்ளும் வசதி படைத்தது.
தனியாக பிரித்து எடுக்கும் லித்தியம்-அயன் வகை பேட்டரிகள் 1 மணி நேரத்தில் 80 சதவீத சார்ஜ் ஏறும் வசதி கொண்டது. கிலோமீட்டருக்கு 10 பைசா செலவில் பயணிக்கலாம். எளிய சுலப தவணை வசதி ஏற்படுத்தி தருகிறோம்.
மேலும், எங்கள் வாகனங்களுக்கென சர்வீஸ் செய்ய திருச்சியில் முதன் முறையாக தனி அதிநவீன சர்வீஸ் சென்டர் அமைத்துள்ளோம். போதுமான அளவு வாகனங்கள் கையிருப்பில் உள்ளதால் உடனடி டெலிவரி செய்து தரமுடிகிறது என்றார். மேலும் கூடுதல் விபரம் தேவைப்படுவோர் 0431-4216090, 98424-92075 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.