திருச்சியில் நூற்றாண்டு பாரம்பரியம் கண்ட ஜவுளி நிறுவனத்தினரின் புதியதோர் தொடக்கம்…
திருச்சியில் 1890ம் ஆண்டு நரசிம்மன் என்பவரால் அவரது மகன் நாகேந்திரன் பெயரில் எம்.என்.நாகேந்திரன் சன்ஸ் என்ற ஜவுளி நிறுவனம் உருவானது. பட்டுப் புடவைகளுக் கென்று தனிப்பெரும் கடையாக விளங்கியது.
மலைவாசல் உள்ளே கடை என்ற பெயருடன் நான்கு தலைமுறைகளை கடந்து விற்பனை நடைபெற்று வந்தது. தற்போது அதன் பங்குதாரராக இருந்த விஷால் முரளிதரன் தற்பொழுது ஸ்ரீ நாகேந்திரம் சில்க் ஹவுஸ் என்ற பெயரில் புதிய ஜவுளி நிறுவனத்தை தொடங்குகிறார் .
திருச்சி என்எஸ்பி ரோடு கரூர் வைசியா வங்கி எதிர் சந்தில் ஒத்தைமால் தெருவில் வரும் ஏழாம் தேதி புதிய பொலிவுடன் தொடங்கும் இந்த நிறுவனத்தின் திறப்பு விழா குறித்து அதன் உரிமையாளர் விஷால் முரளிதரன் கூறுகையில்….
தலைமுறை வாடிக்கையாளர் களை கொண்டு மிகச் சிறப்பாக காஞ்சிபுரம், திருபுவனம், அய்யம்பேட்டை, சேலம், ஜலகண்டபுரம், மதுரை ஆகிய பகுதிகளில் நேரடியாக தறியில் உற்பத்தி செய்யப்பட்டு பட்டுப் புடவைகளை தருவித்துள்ளோம். அதிக விளம்பரம் இல்லாமல் ஏசி, கூல்ட்ரிங்க்ஸ் உபசரிப்பு போன்றவைகளை தவிர்த்து இனிமையான வரவேற்பும், இன்முகத்தோடு சேவையும், தரமான பொருட்களை விற்பனை செய்வதை எங்கள் தாரக மந்திரமாக கொண்டு செயல்பட்டு வருகிறோம்.
இப்போதைய ஸ்ரீ நாகேந்திரம் சில்க் ஹவுஸில் கல்யாண முகூர்த்த பட்டு புடவை கள் ,பட்டு வேஷ்டிகள், பட்டு பாவாடைகள் ,பேன்சி பட்டு சேலைகள், ராம் ராஜ் வேஷ்டி சட்டை துணிகள், கல்யாணி காட்டன் ,சில்க் காட்டன் புடவைகள் ,செட்டிநாடு காட்டன் புடவைகள், ராணி சுங்கடி புடவை கள் ,அம்மன் பாவாடை ,சுவாமி பஞ்சகட்சம். சாய்பாபா வஸ்திரம், பவித்ர மாலைகள் அனைத்து ரக சுவாமி வஸ்திரங்கள், கருங்காலி பொருட்கள் மற்றும் அனைத்து விதமான பூஜை பொருட்களும் கிடைக்கும் என்று தெரிவித்துள்ளார்.