திருச்சி தி சென்னை சில்க்ஸ் மற்றும் குமரன் தங்க மாளிகை சார்பில் மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம்!
தி சென்னை சில்க்ஸ் நிறுவனம் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் இலவச கண் சிகிச்சை முகாம் நடத்திவருகிறது. இதன்படி 14வது ஆண்டு இலவச கண் சிகிச்சை முகாம் இன்று (12/06/2022) திருச்சி தெப்பக்குளம் பிஷப் ஹீபர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
குமரன் தங்கமாளிகை, மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை, திருச்சி மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் ஆகியவை இணைந்து நடத்திய இந்த முகாமினை திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு தொடங்கிவைத்தார்.
சென்னை சில்க்ஸ் மற்றும் குமரன் தங்கமாளிகை நிர்வாக இயக்குனர்கள் பரஞ்சோதி, நந்தகோபால், பிஷப் ஹீபர் பள்ளி தாளாளர் சுதர்சன், தலைமை ஆசிரியர் ஞானசுசீகரன், சென்னை சில்க்ஸ் பொது மேலாளர் ஆனந்தகுமார் ஆகியோர் குத்து விளக்கேற்றி விழாவை தொடங்கிவைத்தனர்.
மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவ குழுவினர் கண் பரிசோதனை செய்தனர். அறுவை சிகிச்சை தேவைப்படும் நபர்கள் கண்டறிந்து அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். இந்த முகாமினை சென்னை சில்க்ஸ் மக்கள் தொடர்பு அலுவலர் நாகராஜன் தலைமையில் பணியாளர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.
முகாமில் பங்கேற்ற அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது. 2020 – 2021 கொரானா காலகட்டத்திற்கு முன் 2019ல் நடைபெற்ற இலவச கண் சிகிச்சை முகாமில் 1493 பேர் பலனடைந்தனர். இதில் 700 பேருக்கு இலவச ஆபரேசன் செய்யப்பட்டு IOL லென்ஸ் பொருத்தப்பட்டது.
திருச்சியில் இது வரை 13 ஆண்டுகள் நடைபெற்ற இந்த இலவச கண் சிகிச்சை முகாமில் 16,994 பேர் பலனடைந்தனர். இதில் 5,707பேருக்கு இலவச ஆபரேஷன் செய்து IOL லென்ஸ் பொருத்தப்பட்டது.
மேலும் 2,548 பேருக்கு இலவச கண் கண்ணாடி வழங்கப்பட்டது. இந்த முகாம் திருச்சி மட்டும் அல்லாமல் கோவை மற்றும் திருவள்ளூர் கிளை சார்பிலும் நடைபெற்றது.