இணையதள மோசடிக்கு அலர்ட்… வங்கியின் முக்கிய அறிவிப்பு
வாடிக்கையாளர்களுக்கு பஞ்சாப் நேஷனல் வங்கி இணையதள மோசடி தடுக்க எச்சரிக்கை தகவல்களை வெளியிட்டுள்ளது.
அதன்படி பாஸ்வேர்டு / பின் / சிவிவி / ஓடிபி போன்ற சான்று ஆவணங்களை யாருக்கும் தரவேண்டாம். எந்த ஒரு சந்தேகத்திற்கு இடமான மெயில்கள், இணைப்புகள், செய்திகளை திறக்க வேண்டாம்.
ஏடிஎம் பின்நம்பரை எங்கும் குறித்து வைக்க வேண்டாம், இணையதள வங்கி பரிவர்த்தனைக்கு சைபர் கபே / பொது வைபை தவிர்க்க வேண்டும், ஏடிஎம் அல்லது பிஓஎஸ்ஸில் பின்னை உள்ளிடும்போது யாரும் அறியாவண்ணம் உள்ளிட வேண்டும், பாஸ்வேர்டை தானாக சேமிக்க அனுமதிக்க வேண்டாம், பாஸ்வேர்டு எண்ணை அடிக்கடி மாற்ற வேண்டும்.வலுவான பாஸ்வேர்டு எண்ணை பயன்படுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது.