பட்ஜெட் சரியாகப் போடுவது எப்படி?
ஒருவர் தன் சம்பளம் அல்லது சம்பாத்தியத்தில் குறிப்பிட்டத் தொகையை அவசியச் செலவுகள் (Necessary expenses), விருப்பச் செலவுகள் (Discretionary expenses) மற்றும் சேமிப்பு & கடன்களைத் திரும்பக் கட்ட எனப் பிரித்துக்கொள்ள வேண்டும். இவை முறையே 50%, 20% மற்றும் 30 சதவிகிதமாக இருப்பது நல்லது.
அவசியச் செலவுகள் என்கிறபோது வீட்டு வாடகை, பால், மின்சாரக் கட்டணம் போன்ற வற்றைக் குறிப்பிடலாம். விருப்பச் செலவுகள் என்பவை சினிமாவுக்குச் செல்வது, ஹோட்டலில் சென்று சாப்பிடுவது ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.
அவசியச் செலவுக்குப் பணம் அதிகமாகத் தேவைப்படுகிறது எனில், சேமிப்புக்காக இருக்கும் தொகையிலிருந்து செலவு செய்யக் கூடாது. விருப்பச் செலவுகளுக்கு என ஒதுக்கி இருக்கும் தொகையிலிருந்துதான் எடுத்து, செலவு செய்ய வேண்டும். அதுதான் நல்ல யாக இருக்கும்!