பொதுத்துறை வங்கிகளை மொத்தமாக கைகழுவ மோடி அரசு திட்டம்..? வங்கி ஊழியர்கள் அதிர்ச்சி..!
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பொத்துறை நிறுவனங்களையும், அரசுக்குச் சொந்தமான சொத்துக்களையும் தனியார்மயமாக்கும் திட்டத்தில் தீவிரமாக இருக்கும் வேளையில், தனது பட்ஜெட் அறிக்கையில் இரண்டு பொதுத்துறை வங்கிகள் மற்றும் ஒரு இன்சூரன்ஸ் நிறுவனத்தைத் தனியார்மயமாக்கும் திட்டத்தை அறிவித்தது.
இத்திட்டத்திற்கு ஏற்கனவே வங்கி ஊழியர்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் வங்கி தனியார்மயமாக்கலில் இருக்கும் முக்கியமான கட்டுப்பாட்டை விலக்க புதிய மசோதா கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு நடக்கயிருக்கும் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் பொதுத்துறை வாங்கிகளை மொத்தமாக விற்பனை செய்து தனியார்மயமாக்கும் மசோதாவை நிதியமைச்சகம் முன்வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மழைக்காலக் கூட்டத்தொடர் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் மத்திய அரசு சார்பில் தாக்கல் செய்யப்படும் மசோதாவில் பொத்துறை வங்கிகளில் மத்திய அரசு வைத்துள்ள பங்குகளை மொத்தமாக விற்பனை செய்துவிட்டு வெளியேற வழிவகுக்கும் முக்கியமான மசோதா இடம்பெற உள்ளதாகத் தெரிகிறது.
மத்திய அரசு தற்போது மத்திய அரசு ஒரு பொத்துறை வங்கியை தனியாருக்கு விற்பனை செய்ய வேண்டும் என்றால் வங்கி நிறுவனங்கள் (பங்கீடுகளைக் கையகப்படுத்துதல் மற்றும் பரிமாற்றம்) சட்டம் 1970 கீழ், பொதுத்துறை வங்கிகளில் குறைந்தபட்சம் 51% பங்குகளை மத்திய அரசு வைத்திருக்க வேண்டும். 26% பங்குகள் கட்டுப்பாடு தனியார்மயமாக்கலின் போது குறைந்தபட்சம் 26% பங்குகளை மத்திய அரசு வைத்திருக்க வேண்டும் என்றும், இதைப் படிப்படியாகக் குறைக்கலாம் என்று முன்பு திட்டமிடப்பட்டது.
இதேபோல் தனியார் வங்கிகள் ப்ரோமோட்டர்கள் 26 சதவீத பங்குகளை வைத்திருக்க முடியும். 100 சதவீத பங்குகள் விற்பனை இந்நிலையில் தற்போது தாக்கல் செய்யப்படும் மசோதா மூலம் 100 சதவீத பங்குகளை விற்பனை செய்ய அரசுக்கு வழிவகுக்கும். இதனால் வங்கிகளை வாங்க முன் வருபவர்களின் எண்ணிக்கையும், போட்டியும் அதிகரிக்கும்.
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடருக்கான தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. IDBI விரைவில் மத்திய அரசிடம் இருக்கும் IDBI-யின் 45.48 சதவீத பங்குகளை விற்பனை செய்ய விலை விண்ணப்பத்தை மத்திய அரசு பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.எல்ஐசி நிறுவனம் சுமார் 49.24 சதவீத பங்குகளை IDBI-யில் வைத்துள்ளது.