வருமான வரித்துறையிலிருந்து நோட்டீசா?
நம்மில் பலர் ஒவ்வொரு ஆண்டும் வருமான வரி செலுத்துவோராக இருப்போம். நாம் வாங்கும் சம்பளத்தில் வருமான வரித் துறை நிர்ணயத்தை இலக்கைத் தாண்டி சம்பாதித்தால் அதற்கு வரி செலுத்த வேண்டியிருக்கும். வேறு சில விஷயங்களும் வரி செலுத்துவோம். அப்படி நீங்கள் முறையாக வரி செலுத்துவோராக இருந்தால் பிரச்சினை இல்லை. வரி செலுத்தாமல் மோசடி செய்பவர்களுக்கும் வரி செலுத்த முடியாதோருக்கும் அபராதம், சிறை தண்டனை உள்ளிட்ட நடவடிக்கைகள் பாயும்.
ஆனால், நீங்கள் ஒவ்வொரு ஆண்டும் முறையாக வருமான வரி செலுத்தியும் உங்களுடைய வீட்டுக்கு வருமான வரித் துறை திடீரென நோட்டீஸ் அனுப்பினால் என்ன ஆகும்? இதைப் பார்த்து நீங்கள் பயப்படத் தேவையில்லை. வருமான வரித்துறை வேறு சில காரணங்களுக்காகவும் உங்களுக்கு நோட்டீஸ் அனுப்பலாம். அது தெரியாமல் பலர் அச்சம் கொள்வார்கள்.
வருமான வரியை சரியான நேரத்தில் தாக்கல் செய்யாதது, கணக்கீட்டுப் பிழைகள், வருமானத்தை சரியாகத் தெரிவிக்காதது அல்லது அதிக ரீஃபண்ட் கோருவது போன்ற பல்வேறு காரணங்களுக்காக உங்க வீட்டுக்கு நோட்டீஸ் அனுப்பப்படலாம்.
வருமான வரி செலுத்துவதற்கான காலக்கெடுவுக்குள் நீங்கள் செலுத்தாவிட்டால் அப்போது தானாகவே வருமான வரித் துறையிடமிருந்து நோட்டீஸ் வருவது வழக்கம். வருவாய் செலுத்த வேண்டிய மதிப்பீட்டு ஆண்டின் இறுதிக்குள் இந்த நோட்டீஸ் அனுப்பப்படும். வேறு காரணம் என்னவென்றால் உங்களது வரித் தாக்கலில் வருமான விவரங்கள் பொருந்தவில்லை என்றால் அப்போதும் பிரச்சினைதான்.
வரி செலுத்துவோர் வழங்கிய தகவல்களைச் சரிபார்க்கப்படும். நீங்கள் ரீஃபண்ட் தொகைக்கு விண்ணப்பிக்கும்போதும் உங்களுக்கு அதுகுறித்த தகவல் நோட்டீஸாக அனுப்பப்படும். எனவே இனி நோட்டீஸ் வந்தால் பயப்படத்தேவையில்லை. சரியாக வருமான வரி செலுத்தியிருந்தால் பிரச்சினை இல்லை.