இது உங்கள் பகுதி… கேள்வி & பதில்
தொழில் அனுபவம் இல்லாதவர்கள் தொழிற் கடன் பெற முடியுமா?
செய்தொழில் அனுபவம் இல்லாவிட்டாலும், தேர்ந்தெடுக்கும் தொழில் பற்றிய விவரங்கள் அறிந்து அதற்கான கேள்வி ஞானம் இருந்தால் போதும்
அரசு சார்பு நிறுவனங்கள் மூலமாக கடன்உதவி பெற விண்ணப்பிக்கலாமா அல்லது வங்கிகள் மூலமாக கடன் உதவி பெற விண்ணப்பிக்கலாமா?
அரசு சார்பு நிறுவனங்களான DIC, TIIC, MSME, KVIC போன்ற நிறுவனங்கள் மூலமாக விண்ணப்பித்தால் தொழில் சார்ந்த பயிற்சிகள் வழங்கப்பட்டு சில வரைமுறைகளுக்குட்பட்ட ஏனைய சலுகைகள் கிடைக்கும்.
தொழிற்கடன் பெற சொத்து ஜாமீன் அல்லது இதர பிணய கட்டுப்பாடுகள் உண்டா?
10 லட்ச ரூபாய்க்கு மேல் கடன் விண்ணப்பிப்பவர்களுக்கு கடன் கோரும் தொகையில் கணிசமான சதவீதம் சொத்து பிணையம் கண்டிப்பாக கோரப்படும். சில நிபந்தனைக்குட்பட்ட பிணையிமில்லா கடன் வசதியும் உண்டு.
ஏற்றுமதி தொழில் செய்ய ஆர்வம் உள்ளவர்களுக்கு அதுபற்றிய விளக்கம் எங்கே கிடைக்கும்?
தேர்ந்தெடுக்கப்படும் ஏற்றுமதிக்கான பொருட்கள் மற்றும் தேவைப்படும் நாடுகள், அவற்றுக்கான நிபந்தனைகள் போன்றவைகளை தெரிந்து கொள்ள வேண்டும். மேலும், விபரங்களுக்கு மாவட்ட தொழில்மையம் அல்லது திருச்சி மாவட்ட குறு மற்றும் சிறு தொழில்கள் சங்க அலுவலகத்தை அணுகவும்.
பதப்படுத்தல் மற்றும் மதிப்பு கூட்டல் பொருள் உற்பத்தி பற்றி எங்கே தெரிந்து கொள்வது?
திருச்சி மாவட்ட வாழை ஆராய்ச்சி மையம் மற்றும் தோட்டக்கலைத்துறை அலுவலகம் ஆகியவற்றை அணுகவும்.
இரா.சண்முகம், தொழில்வழிகாட்டி
97919 49333