இந்தியாவில் 400 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வாட்ஸ் அப்பை பயன்படுத்து வருகின்றனர். இதில் வரையறுக்கப்பட்ட பயனாளர்களுக்கு டிஜிட்டல் முறையில் பணப் பரிமாற்றத்தை செய்து கொள்ளும் வசதியை தங்களது ஆப் மூலம் செய்துள்ளது.
தேசிய பேமென்ட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா அனுமதி கொடுத்ததை தொடர்ந்து வாட்ஸ் அப்பில் இந்த சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவின் 10 உள்ளூர் மொழிகளில் பணப் பரிமாற்றத்தை செய்து கொள்ளும் வகையில் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
பண பரிமாற்றத்திற்காக ஸ்டேட் பேங்க், ஐ.சி.ஐ.சி.ஐ,, ஹெச்.டி.எஃப்.சி., ஆக்சிஸ் மற்றும் ஜியோ வங்கி ஆகியவற்றுடன் கூட்டு வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 20 மில்லியன் பயனாளர்களுக்கு இந்த வாட்ஸ்அப் பணபரிமாற்ற வழங்க உள்ளதாக தேசிய பேமெண்ட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா தெரிவித்துள்ளது.