பிசினஸ் திருச்சி வெளியாகி இருந்த ஆயத்த ஆடைகள் சந்தையில் புத்தாநத்தம் என்ற கட்டுரையைப் படித்தேன். திருச்சியில் இப்படி ஒரு இடம் உள்ளது, என்பதை இதன் மூலமாகவே அறிந்தேன்.இனி அடைகள் வாங்க புத்தாநத்தத்திற்கு புறப்பட வேண்டியது தான்..!
ராமு, உறையூர்
உங்கள் பிசினஸ் திருச்சி பத்திரிகையை படிப்பதன் மூலம்பல தகவல்களை அறிய முடிகிறது. முதல் பக்கத்தில் வரும் செய்திகள் சுவாரசியமாக உள்ளது. வேலைவாய்ப்பு செய்திகளையும் பதிவு செய்தால் என்னைப் பேன்ற இளைஞர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
ஜான் கென்னடி, ஸ்ரீரங்கம்
புது பத்திரிகைஎன்று தெரியாத வகையில்தரமான பேப்பரில்பிரிண்ட்டிங் தெளிவாக வண்ண மையாமாக, கட்டுரைகளும் சிறப்பாக, பல்வேறு தகவல்களை உள்ளடக்கி, பல விளம்பரங்களையும் கொண்டு வெளியாகும் பிசினஸ் திருச்சியில் சந்தா முறை உள்ளதா..?ஜோசப், கீழகல்கண்டார் கோட்டை.
பிஸ்னஸ் திருச்சியை படித்து புத்தாநத்தம்பற்றி அறிந்தேன், மேலும் yes agency விளம்பரத்தைப் பார்த்து அவர்களை தொடர்பு கொண்டு, அந்த நிறுவனத்தின் திருவரம்பூர் டீலராக செயல் பட உள்ளேன். நன்றி பிசினஸ் திருச்சி
ரகு, திருவரம்பூர்
நானும் தரைக்கடை தான் நடத்தி வருகிறேன், பிசினஸ் திருச்சி ரயில் தரைக்கடை வியாபாரிகள் பற்றிய செய்தியை படித்தேன், எங்களின் தற்போதைய நிலையை எப்படியே பதிவு செய்து இருந்தீர்கள்.
தண்டபாணி, NSB ரோடு