திருச்சியில் ஆர்கானிக் டீசர்ட்ஸ் அறிமுகம்! கே2 இந்தியா ஸ்டைல்ஸ் தகவல்
தீபாவளி விற்பனை களைகட்டத் தொடங்கிவிட்டது. ஜவுளி, ஜுவல்லர்ஸ், பர்னிச்சர் மார்ட், எலக்ட்ரானிக்ஸ் நிறுவனங்கள் பல தள்ளுபடிகளையும், புதிய ரகங்கள் அறிமுகம் செய்வரையும் தொடங்கிவிட்டது.
இதில் திருச்சி-திண்டுக்கல் சாலையில் தீரன்நகர் பஸ்நிலையம் அருகில் உள்ள கே2 இந்தியா ஸடைல்ஸ் என்ற ரெடிமேட் ஷாப் தனது 2 ஆம் ஆண்டு தொடக்க விழா மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறியவர்களுக்கு ரு.50 முதலும், பெரியவர்களுக்கு ரூ.100 விலையில் தொடங்கும் வகையில் தனது தள்ளுபடி விற்பனையை தொடங்கியுள்ளது.
மேலும் திருச்சி முதல்முறையாக ஆர்கானிக் டீசர்ட்ஸ் அறிமுகம் செய்துள்ளதாக நிறுவனத்தினர் தெரிவித்தனர். மேலும் இது குழந்தைகளுக்கு மிகவும் பாதுகாப்பான துணி வகை என்றும், மேலும் சிறியவர்கள் மற்றும் பெரியவர்களுக்கான அளவுகளிலும் கிடைக்கிறது என தெரிவித்தனர். இங்கு ஆர்டரின் பேரில் டீசர்ட்ஸ் தைத்தும் தருகின்றனர்.