Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

நூற்றாண்டை நெருங்கும் திருச்சி ஜோசப் கண் மருத்துவமனை!

நூற்றாண்டை நெருங்கும் திருச்சி ஜோசப் கண் மருத்துவமனை!

கண் ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் தவிர்க்க முடியாத உறுப்பு. மனிதனின் அனைத்து உணர்வுகளையும் பிரதிபலிக்கும் கண்ணாடி. உலகை மனிதன் உணரவும், அறியவும், புரியவும் கண்ணே பிரதானமாகும். கண் மிகவும் நுணுக்கமான ஒரு முக்கிய பாகமாகும்.

கண் சிகிச்சையில் திறம்பட தேர்ந்து பொதுமக்களிடம் நற்பெயரும், பயனாளிகளிடம் பாராட்டும் பெற்று தற்போது அதிநவீன வசதிகளுடன் சேவையாற்றி வரும் திருச்சி ஜோசப் கண் மருத்துவமனை 1934ஆம் ஆண்டு ஜோசப் என்பவர் தொடங்கப்பட்டது ‌. கண் சிகிச்சை தொடர்பான அனைத்து விதமான பிரச்சினைகளுக்கும் ஒரே தீர்வாக இம்மருத்துவமனை அமைந்ததால் பொதுமக்களுக்கு பெரும் பயனாக திகழ்ந்தது ‌‌.‌ தொடர்ந்து வருடங்கள் கூடக்கூட கண் மருத்துவத்திற்கு என உருவாகும் அனைத்து latest Technology-களும் உடனுக்குடன் தெரிவிக்கப்பட்டு மிகச் சிறந்த மருத்துவ சேவையை தொடர்ந்தனர்.

வீடியோ லிங்:

திருச்சியில் தேசிய தர நிர்ணய NABH அங்கீகாரம் பெற்ற முதல் மருத்துவமனை: தமிழக அளவில் 100க்கும் குறைவான மருத்துவமனைகளே தேசிய தர நிர்ணயம் பெற்றுள்ளனர். கண் மருத்துவ சேவைகளில் முன்னோடியாக செயல்பட்டு வரும் திருச்சி ஜோசப் கண் மருத்துவமனையும் இதில் இணைந்திருப்பது மிகவும் பெருமையாகும்.

திருச்சியில் முதல் மருத்துவமனையாக இந்த அங்கீகாரத்தை பெற்றுள்ளது. மிகவும் அர்ப்பணிப்போடு கடினமான கூட்டு முயற்சியினால் 150க்கும் மேற்பட்ட தரப்பகுதிகளை நிவர்த்தி செய்த பின்னரே இந்த அங்கீகாரச் சான்று கிடைக்கப்பெறும். இங்கு வரும் நோயாளிகளுக்கு தரமான நெறிமுறைகளை பின்பற்றி சிகிச்சை அளிக்கப்படுகிறது மேலும் இதன் சுற்றுச்சூழல் மற்றும் செயல்பாடுகள் நோயாளிகளுக்கு பாதுகாப்பாக இருக்கும் படி செய்யப்படுகிறது ‌‌‌‌. இந்த மருத்துவமனையில் பல ஆண்டுகளாகவே அறுவை சிகிச்சை செய்து கொள்ளும் நோயாளிகளுக்கு எவ்விதமான கிருமி தாக்குதலும்
(Infection) இல்லாமல் செய்ததால் நோயாளிகளின் குணமாகும் சதவீதம் உயர்ந்துள்ளது.

காலதாமதம் செய்யாமல் கவனமுடன் இருந்தால் கண்களை காப்பாற்றலாம்!

25 ஆண்டு கால சிறப்பு அனுபவம் பெற்ற விழித்திரை மருத்துவ நிபுணர் அம்ஜத் சல்மான் தற்போது திருச்சி ஜோசப் கண் மருத்துவமனையில் கடந்த 22 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். அதிநவீன கருவிகள் மூலம் கண் சிகிச்சையில் துல்லியம் காட்டும் அவரிடம் பேசிய போது:
கண்ணில் கோளாறு என்றாலே கண்புரை (cataract) என்ற எண்ணமே மக்கள் மனதில் உள்ளது. ஆனால் அப்படியல்ல பல்வேறு விதமான நோய்கள் வர வாய்ப்புள்ளது. பார்வையில் குறைபாடு இருந்தால் காலதாமதம் செய்யாமல் உடனடியாக பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். காலதாமதம் கண் பார்வை இழக்க செய்யும். (Retinal Detachment) எனப்படும் விழித்திரை கிளிதல் மிகவும் அபாயகரமானது. உடனடி சிகிச்சை மேற்கொள்ளாவிட்டால் பார்வை இழக்கும் அபாயம் உள்ளது.

விழித்திரை மருத்துவ நிபுணர் அம்ஜத் சல்மான்
விழித்திரை மருத்துவ நிபுணர் அம்ஜத் சல்மான்

சர்க்கரை, ரத்த அழுத்த நோயாளிகளுக்கு பார்வை திறன் மெதுவாக குறைய தொடங்கும். விழித்திரை வீக்கம் ரத்தக்கசிவு போன்றவற்றை லேசர் சிகிச்சை மூலம் முற்றிலுமாக குணப்படுத்த முடியும். குறை மாத குழந்தைகளுக்கும் கண் நோய் தாக்கும் அபாயம் உள்ளது.

ஜோசப் கண் மருத்துவமனையில் கடந்த 2004 ஆண்டு முதல் உலக தரம் வாய்ந்த அதிநவீன லாசிக் லேசர் சிகிச்சை மையம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதுவரை 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நபர்கள் இந்த சிகிச்சை மூலம் பயன் பெற்றுள்ளனர். ஒருமுறை பார்வை குறையத் தொடங்கினால் அதை மீட்பது கடினம். சர்க்கரை நோய், இரத்த அழுத்தம் உள்ளவர்கள் வருடத்திற்கு ஒருமுறை கண் பரிசோதனை செய்து கொள்வது அவசியம்.

வீடியோ லிங்:

விழித்திரை வீக்கம் போன்றவற்றை கண்ணில் போடப்படும் ஊசி மூலம் சரி செய்யலாம். விழித்திரை தழும்பு, ஓட்டை விழுதல் போன்ற அறுவை சிகிச்சை மூலமாக மட்டுமே சரி செய்ய இயலும். இங்கு அல்ட்ரா சவுண்ட், லேசர் மெஷின், விட்ரக்டமி, ஆபரேட்டிங் மைக்ரோஸ்கோப் போன்ற அதிநவீன மருத்துவ கருவிகள் மூலம் பார்வை இழப்பை தடுக்கும் வசதி ஜோசப் மருத்துவமனையில் உள்ளது. டிஜிட்டல் கேமரா மூலம் விழித்திரை குறைபாடுகளை துல்லியமாக கண்டறியலாம்.

Multi spot green laser விழித்திரை சிகிச்சை குறைந்த நேரத்தில் நிறைய நோயாளிகளை பரிசோதிக்க முடியும். இது போன்ற பல்வேறு சிறப்பு அம்சங்கள் திருச்சி ஜோசப் கண் மருத்துவமனை திறம்பட செயலாற்றி வருகிறது என்று தெரிவித்தார்.

18 வகை தனித்தனி பிரிவுகளில் கண் சிகிச்சை

  • கண் பொது மருத்துவம், குழந்தைகள் கண் சிகிச்சை, கருவிழி சிறப்பு மருத்துவம், கண்ணீர் அழுத்தம் (கிளப்டமா), குறைந்த பார்வை, கண் இமை குறைபாடு, விழித்திரை சிறப்பு சிகிச்சை (ரெட்டினா), மாறுகண் குறைபாடு, கண்புரை நோய், லாசிக் லேசர் சிகிச்சை பிரிவு போன்ற தனித்தனி பிரிவுகளில் சேர்த்த சிறப்பு மருத்துவ நிபுணர்கள் (AIMS மருத்துவர்கள் உட்பட) சிகிச்சையில் வெற்றி சதவீதம் 100%
  •  Eye Bank : கண் தானம் பெறப்பட்டு தேவைப்படுபவர்களுக்கு உடனடியாக பொருத்தும் வசதி
  •  24 hours Emergency பிரிவு: விபத்து போன்ற அவசர சிகிச்சை தேவைப்படுபவர்களுக்கு அதற்கான பிரத்தியேக மருத்துவமனைகளில் 24 மணி நேர சிகிச்சை பிரிவு உள்ளன. அதைப்போன்று, 24 மணி நேர கண் மருத்துவ நிபுணர்கள் பணியாற்றும் மருத்துவமனையாக சிறப்பு தகுதியுடன் திகழ்கிறது.
  •  உலகத் தரத்தில் அதிநவீன கருவிகளுடன் 6 அறுவை சிகிச்சை அரங்குகள் (operation Theatre)
  •  தீயணைப்பு கருவிகள் பொருத்தவும், கையாளவும் தகுதியான பயிற்சி பெற்ற பணியாளர்கள்
  •  ஒரே நேரத்தில் 150 நோயாளிகள் தங்கி சிகிச்சை பெறும் வசதி

ஜோசப் கண் மருத்துவமனையில் அதிநவீன லேசர் சிகிச்சை!
லேசிக் ( Lasik ) லேசர் உதவிக்கொண்டு இயல்பு நிலை கருவிழி திருத்தம் என்பது கிட்டப்பார்வை, தூரப்பார்வை மற்றும் உருப்பிறழ்ச்சி ஆகிய வற்றை திருத்துவதற்கான ஒருவகை ஒளி முஷிவு அறுவை சிகிச்சையாகும். லேசர் மற்றும் பி.ஆர்.கே ( prk ) ஆகிய 2 வகை லேசர் சிகிச்சைகள் ஜோசப் கண் மருத்துவமனையில் நவீன கருவி மூலம் மேற்கொள்ளப்படுகிறது.
(mel 80 exci-| merlasu ) இது பல நோயாளிகளுக்கு திருத்த கண்ணாடிகள்அல்லது தொடுவில்லை ஆகியவற்றை அணிவதற்கு பதிலான ஏற்ற மாற்றாக அமைகிறது.

லேசிக் மூன்று படிகளில் செய்யப்படுகிறது . முதல் படியானது விழி வெண்பட ( cor-nea) திசுவின் ஒரு மெலிதான மடலை உண்டாக்குவதாகும் . இரண்டாவது இந்த மடலுக்கு கீழே இருக்கும் விழிவெண்படலத்தை லேசர் உதவி கொண்டு மறு வடிவமைப்பதாகும் . இறுதியாக மடலானது சீர் செய்யப்படுகிறது .

சிகிச்சை பெறுபவர்களுக்கு பொதுவாக சொட்டு மருந்துகள் அளிக்கப்படுகின்றன . சிகிச்சைக்குப்பின் ஒரு மாதத்திற்கு இருள் கவசங்களும் (Dark glass) அறிவுறுத்தப்படுகிறது . மேலும் தூங்கும் போது கண்களை தேய்ப்பதை தவிர்க்கவும். உலர் கண்களை குறைக்கவும் பாதுகாப்பு கண்ணாடிகள் வழங்கப்படுகின்றனர் கண்களை ஈரப்படுத்த அவர்கள் பாதுகாப்பு பொருளற்ற தண்ணீர், சொட்டு மருந்துகள் வழிமுறைகள் பரிந்துரைக்கப்படுகிறது.

அதிநவீன நுண்துளை அறுவை சிகிச்சை
ஜோசப் கண் மருத்துவமனையின் அதிநவீன நுண்துளை அறுவை சிகிச்சை MICS கண்புரை அறுவை சிகிச்சை (Cataract Surgery) என்பது கண்ணில் உருவாகிய பார்வை மறைக்கும் புரையோடிய இயற்கையான படிகவில்லையை (கண்புரை – cataract) நீக்கும் மருத்துவ செயல்முறையாகும்.

இச்சிகிச்சையின் போது, புரையமைந்த வில்லை நீக்கப்பட்டு, செயற்கை வில்லை அல்லது ஐ.ஓ.எல் (IOL-Intraocular Lens) பொருத்தப்படுகிறது .

உலகதரத்தில் சிகிச்சை
திருச்சியிலேயே என்.ஏ.பி.எச். (NABH Full Accreditation) முழுமையான தரச் சான்றிதழ் பெற்ற முதல் கண் மருத்துவமனையான, ஜோசப் கண் மருத்துவமனையில், உலகத்தரம் வாய்ந்த Centurion Phaco Machine உபயோகித்து, 1.8 – 2.2 மில்லி மீட்டர் துவாரத்தின் வழியே செய்யப்படும் எம்.ஐ.சி.எஸ் (MICS-micro incision cataract surgery) செய்யப்படுகிறது. உலகத்தரம் வாய்ந்த monofocal, multifocal மற்றும் Toric IOL பொறுத்தப்படுகின்றன.

இந்த சிகிச்சைக்கு ஓய்வு தேவையில்லை
இந்த அதிநவீன எம்.ஐ.சி.எஸ் அறுவை சிகிச்சைக்கு பின், நோயாளிகள் அதிக நாட்கள் ஓய்வெடுக்க தேவையில்லை. சிகிச்சை செய்த அன்றே வீடு திரும்பலாம். ஓரிரு நாட்களிலேயே தொலைக்காட்சி பார்ப்பது, கணினியில் வேலை செய்வது, புத்தகம் படிப்பது மற்றும் பிற இயல்பான வேலைகள் செய்வதை மேற்கொள்ளலாம். கண்ணில் எரிச்சலோ நீர் வடிவதோ ஏற்படாது. எட்டப்பார்வைக்கு பெரும்பாலும் கண்ணாடி அணிய வேண்டிய தேவை இருக்காது.

கண் அழுத்தத்தால் பார்வை இழப்பா?
கிளாக்கோமா கண் அழுத்த நோயான கிளாக்கோமா (Glaucoma)என்பது கண்ணிலுள்ள சராசரி நீர் அழுத்தமான 10 முதல் 21 mmHg-யை விட கூடுதலாகி, அதனால் ஏற்படும் கண்ணின் பார்வை நரம்பின் பாதிப்பே ஆகும். இந்நோயினால் சிலர் பார்வையை இழந்தும் வருகிறார்கள்.

வாகனம் ஓட்டுபவரா?
கண் பார்வையில் தொடர்ந்து மாற்றம் ஏற்படுவதால் அடிக்கடி கண்ணாடி மாற்றுதல், காட்சிக் களத்தில் (Visual field) ஏற்படும் குறைபாடுகளால், நடக்கும் போது பக்கவாட்டில் இடித்துக்கொள்ளுதல், வாகனம் ஓட்டும்போது சுற்றுப்பார்வை தெரியாமல் இருத்தல் போன்ற பாதிப்புகள் ஏற்படும்.

50 வயது மனிதரா நீங்க…
50 வயதுக்கு மேற்பட்டவர்கள், கிளாக்கோமாவால் பாதிக்கப்பட்ட குடும்ப பின்னணி கொண்டவர்கள், சர்க்கரை நோய், ஒற்றை தலைவலி, குறைந்த ரத்த அழுத்தம் உள்ளவர் கள், புகைப்பிடிப்பவர்கள், ஸ்டீராய்டு சொட்டு மருந்து அதிக நாட்கள் பயன்படுத்துபவர்கள் இவர்களுக்கெல்லாம் கிளாக்கோமா ஏற்பட வாய்ப்பு உள்ளது.

ஆரம்பத்திலேயே கவனிங்க..
கிளாக்கோமாவை ஆரம்பக் கட்டத்திலேயே கண்டுபிடிக்க Humphrey field Analyser மற்றும் OCT RNFL போன்ற அதிநவீன இயந்திரங்கள் ஜோசப் கண் மருத்துவமனையில் உள்ளன. 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் வருடம் ஒரு முறையாவது கண் மருத்துவரை அணுகி, பரிசோதனை செய்வது அவசியம்” என்கிறார் திருச்சி ஜோசப் கண் மருத்துவமனையின் கிளாக்கோமா ஸ்பெசலிஸ்ட் மருத்துவர் அர்ச்சனா தெரசா.

 

Leave A Reply

Your email address will not be published.