வீட்டுக் கடன் வாங்க ஜாய்ண்ட் லோன் சரியா? தவறா?
பொதுவாக வீட்டுக்கடன் வாங்கும்போது நம்முடைய கிரெடிட் ஸ்கோர், வருமானம், வயது என பலவற்றை கவனித்து தான் வங்கிகள் கடன் கொடுக்கலாமா? வேண்டாமா? என்பதை தீர்மானிக்கும். எனினும் ஒரு சிலருக்கு வருமானம் குறைவாக இருக்கும்போது ஜாய்ண்ட் லோன் ஆகவும், வயது அதிகமாக இருந்தாலும் ஜாய்ண்ட் லோன் ஆகவும் வங்கி அதிகாரிகள் பரிந்துரை செய்வார்கள். இது இயல்பான ஒன்று தான் என்றாலும், இது போன்று ஜாய்ண்ட் லோனாக வாங்கும்போது பல்வேறு வகையான பலன்கள் உண்டு.
குறைந்த வட்டி விகிதம் வயது அதிகம், வருமானம் குறைவு, என பற்பல காரணிகளுக்கு மத்தியில் தான் ஜாய்ண்ட் லோன் ஆப்சன் என்பது பெரும்பாலும் பரிந்துரைக்கப்படுகிறது. ஆனால் வட்டி விகிதம் அதிகமுள்ள இந்த காலக்கட்டத்தில் ஜாய்ண்ட் அக்கவுண்டாக, குறிப்பாக பெண் விண்ணப்பதாரர் ஜாய்ண்ட் அக்கவுண்ட் ஹோல்டராக இணையும்போது உங்களது கடனுக்கான வட்டி விகிதம் இன்னும் குறையலாம். சலுகைகள் ஏராளம் ஏனெனில் பல்வேறு வங்கிகளிலும் இன்றைய காலகட்டத்தில் பெண் வாடிக்கையாளர்களுக்கு, வட்டி விகிதத்தில் சலுகை அளிக்கின்றன.
கடன் அளவு அதிகரிக்கலாம் வீட்டுக் கடன் வாங்க நினைப்பவர்கள் ஜாய்ண்ட் அக்கவுண்டாக விண்ணப்பிக்கும் போது, உங்களது கடனின் தொகை அளவு அதிகரிக்கும். தனியாக விண்ணப்பிக்கும்போது ஒருவரின் வருமானத்தினை பொறுத்தே கடன் அளவு இருக்கும். எனினும் சில சமயங்களில் நாம் எதிர்பார்க்கும் தொகையானது கிடைக்காது. ஆக இருவரும் சேர்ந்த விண்ணப்பதாரர்களாக மாறும்போது கடன் தொகை அளவு அதிகரிக்கும். இங்கு விண்ணப்பதாரர்கள் இருவரின் வருமானமும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். ஆக இது மிக நல்ல விஷயமே.
வரி சலுகை உண்டு பொதுவாக கடனுடன் வரிச் சலுகையும் கிடைக்கும். பிரிவு 24 பின் கிழ் சொத்துக்களுக்கான வட்டியை திரும்ப செலுத்துவதில் 2 லட்சம் ரூபாய் வரை வரிச்சலுகை கிடைக்கும். இதே பெண்கள் முதன்மை விண்ணப்பதாரராக இருந்தால் தான் 2 லட்சம் ரூபாய் வரையில் சலுகையாக பெற முடியும்.
மேலும் கடனை திரும்ப செலுத்துவதற்காக 1.4 லட்சம் ரூபாய் வரையில் தனித்தனியான வரி விலக்கு பெறலாம். முதன் முறையாக வீடு வாங்குபவராக இருப்பின் அதற்கும் 80EE பிரிவின் கீழ் 50,000 ரூபாய்க்கு வரி சலுகை பெற முடியும். ஆக இருவர் விண்ணப்பதாரராக இருக்கும்போது இரு வகையிலும் வரிச்சலுகை கிடைக்கும்.