உயில் இல்லாமல் சொத்து பிரிப்பது எப்படி?
சொத்தை பிரிப்பதற்கு முன், அதன் மீது நிலுவையில் உள்ள கடன் அல்லது பிற வகையான பரிவர்த்தனை தொடர்பான பாக்கிகள் எதுவும் இல்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
நாட்டில் சொத்துரிமை தொடர்பாக இந்து மற்றும் முஸ்லிம் மதங்களில் வெவ்வேறு விதிகள் உள்ளன. இந்து வாரிசுரிமைச் சட்டம், 1956-ல், தந்தையின் சொத்தில் மகன் மற்றும் மகள் இருவருக்கும் சம உரிமை இருப்பதாகக் கருதப்படுகிறது. இந்தச் சட்டத்தில், ஒரு நபர் உயில் செய்யாமல் இறந்தால், அந்த நபரின் சொத்து அவரது வாரிசுகள் அல்லது உறவினர்களுக்கு எவ்வாறு சட்டப்பூர்வமாக விநியோகிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்து வாரிசுரிமைச் சட்டம், 1956-ன் கீழ், சொத்தின் உரிமையாளர் அதாவது தந்தை அல்லது குடும்பத் தலைவர் உயில் எழுதாமல் இறந்துவிட்டால், அந்தச் சொத்து முதல் வாரிசுகளுக்கு (மனைவி, மகன், மகள், தாய்) செல்லும். முதல் தரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வாரிசுகள் இல்லாத பட்சத்தில், 2-ம் வாரிசுகளுக்கு (மகனின் மகள் மகன், மகளின் மகள் மகள், சகோதரன், சகோதரி) சொத்தை வழங்க வழிவகை உள்ளது. இந்து வாரிசு உரிமைச் சட்டம் பௌத்த, ஜைன மற்றும் சீக்கிய சமூகங்களையும் உள்ளடக்கியது.
முன்பு மகளுக்கு சொத்தில் சம உரிமை இல்லை, ஆனால் 2005-ல் வாரிசு உரிமைச் சட்டத்தில் ஏற்படுத்திய முக்கியமான திருத்தத்திற்குப் பிறகு, மகள்களுக்கு மூதாதையர் சொத்தில் மகன்களுக்கு சமமாக சம உரிமை வழங்கப்பட்டுள்ளது.
சொத்தை பிரிப்பதற்கு முன், அதன் மீது நிலுவையில் உள்ள கடன் அல்லது பிற வகையான பரிவர்த்தனை தொடர்பான பாக்கிகள் எதுவும் இல்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும். அதே சமயம், எந்த வகையான மூதாதையர் சொத்து தகராறு அல்லது பிற விஷயங்களுக்கும் சட்ட ஆலோசகர்களின் உதவியைப் பெற வேண்டும், இதனால் குடும்ப தகராறுகள் சட்டத்தின் வரம்பிற்குள் அமைதியான முறையில் பிரச்னைகள் தீர்க்கப்படும்.