திருச்சியில் வரும் 8ந்தேதி கலக்க வராங்க தமிழ்ப் பசங்க
தமிழர் வரலாற்றை அடுத்தத் தலைமுறைக்கு கொண்டு செல்லும் நோக்கத்துடன் திருச்சி மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான ஐந்தாம் ஆண்டு தமிழர் வரலாறு வினா விடை விடைப் போட்டி – 2022 கடந்த (04.-09-.2022) அன்று புனித வளனார் கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
இதில் திருச்சி மாவட்டத்தை சார்ந்த பள்ளி மாணவர்கள் 1000 பேரும், கல்லூரி மாணவர்கள் 600 பேரும் தேர்வு எழுதினர். இத்தேர்வில் தேர்ச்சிப் பெற்ற 100க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு வருகின்ற (08-10-2022) அன்று நண்பகல் 2.00 மணி முதல் மாலை 6.30 மணிவரை தெப்பக்குளம் பிஷப் ஹீபர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் பரிசளிப்பு நிகழ்ச்சியில் கல்லூரி அளவிலான இரண்டு போட்டிகளுக்கு முதல் பரிசு ரூபாய் 15,000, இரண்டாம் பரிசு ரூபாய் 10,000, மூன்றாம் பரிசு ரூபாய் 7,500 நான்காம் பரிசு 5,000 ஐந்தாம் பரிசு ரூபாய் 2,500 எனவும் பள்ளி அளவில் முதல் பரிசு ரூபாய் 10,000 இரண்டாம் பரிசு 7,500 மூன்றாம் பரிசு 5,000 எனவும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு 5 போட்டிக்களுக்கும் ஐந்து நிலைகளில் பரிசுகள் மேலும் ஒவ்வொரு போட்டியிலும் ஊக்கப்பரிசாக தலா பத்து பேருக்கு ரூபாய் 1000 என ஐந்து போட்டிகளுக்கும் சுமார் ஒன்றரை இலட்சம் அளவிற்கு பரிசுத் தொகை வழங்கப்படவிருக்கிறது.
மேற்கண்ட நிகழ்ச்சி நடை பெறும் நாளிலேயே திருச்சி மாவட்டத்தை சார்ந்த அனைத்துக் கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்கும் கலக்க வராங்க தமிழ்ப் பசங்க எனும் தமிழ்ப் பண்பாட்டுக் கலை நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.
இதில் 25க்கும் மேற்பட்ட கல்லூரியின் சார்பில் மாணவர்கள் பங்கேற்று தங்களது கலைத் திறனை நடனம், ஊமை நாடகம், கவிதை, பேச்சு, தனி திறன்கள், போன்மி உருவாக்கம், பாடல் என பல்வேறு உள் அரங்க மற்றும் வெளி அரங்க (onstage – offstage) நிகழ்வுகள் வழி வெளிக்காட்ட உள்ளனர். அவர்கள் அனைவரையும் ஊக்கப்படுத்தும் வகையில் பங்கேற்கும் அனைவருக்கும் நினைவுப் பரிசும் சான்றிதழும் (trophys and certificates for all the participants) வழங்கப்பட உள்ளன.
முதல் மூன்று இடங்களை பிடிக்கும் கல்லூரிகளுக்கு சிறப்புப் படைப்புகளுக்கான சிறப்புப் பரிசும் வழங்கப்பட உள்ளன. இதில் திருச்சி மாவட்ட பள்ளி, கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள், பேராசிரியர்கள், பெற்றோர்கள் தொழிலதிபர்கள், அரசு அதிகாரிகள், தமிழ் மற்றும் சமூக தன்னார்வலர்கள் மற்றும் ஆர்வலர்கள் என ஏராளமானோர் பங்கேற்க உள்ளனர்.
இந்நிகழ்வின் ஊடக துணையாக (Media Partner) பிசினஸ் திருச்சி ஊடகத்தாரும், விளம்பரதாரர்களாக பூர்வீகா மொபைல்ஸ், வசந்த் & கோ, தொப்பிவாப்பா பிரியாணி, மாதவன் மென் பொருள் அங்காடி, பைரோ டெக் கெமிக்கல்ஸ் போன்ற பல நிறுவனங்களும் இணைந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.