அதிக லாபம் பெற நீண்டகால முதலீடு தேவை
“இ.எல்.எஸ்.எஸ் (Equity Linked Savings Scheme) என்பது நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்யும் ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட் ஆகும். எனவே, இது பங்குச் சந்தை ஏற்ற இறக்கங்களுக்கு உட்பட்டது.
இ.எல்.எஸ்.எஸ் ஃபண்டில் முதலீடு செய்வதற்குமுன் அதன் போர்ட்ஃ போலியோவைக் கவனிப்பது முக்கியம். அவை, லார்ஜ்கேப், மிட் கேப் மற்றும் ஸ்மால்கேப் நிறுவனங்களில் முதலீடு செய்யப்பட்டதாக இருக்கும். இவற்றின் அளவு எப்படி வேண்டுமானாலும் இருக்கும்.
புதிய முதலீட்டாளர்கள் மற்றும் மிதமான ரிஸ்க் எடுக்கும் முதலீட்டாளர்கள் லார்ஜ்கேப் நிறுவனப் பங்குகளில் குறைந்தது 60-70% முதலீடு செய்யும் இ.எல்.எஸ்.எஸ் ஃபண்டுகளில் மட்டுமே முதலீடு செய்ய வேண்டும்.
இ.எல்.எஸ்.எஸ் திட்டங்களுக்கு 3 வருட லாக்இன் இருப்பதால், அவை சந்தையில் நீண்ட காலம் முதலீடு செய்வதன் மூலம் இழப்பு ரிஸ்க்கைக் குறைக்க உதவுகின்றன.
தேர்ந்தெடுக்கப்பட்ட இ.எல்.எஸ்.எஸ் ஃபண்டுகளில் எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்வதன்மூலம் முதலீட்டாளர்கள் கால இடர்ப்பாட்டையும் (Time risk) மற்றும் பணத்தை இழக்க நேரிடும் என்ற அச்சத்தை சிறப்பாகச் சமாளிக்க முடியும்.”