மின்சார ஸ்கூட்டர் தயாரிப்பில் ஓலா..!
உலகின் முன்னணி வாடகைக் கார், ஆட்டோ சேவை நிறுவனங்களில் ஒன்றான ஓலா நிறுவனம் தற்போது மின்சாரத்தில் இயங்கும் ஸ்கூட்டர் தயாரிப்பில் இறங்குகிறது. வரும் ஜனவரியில் இந்த ஸ்கூட்டரை சந்தைக்கு கொண்டு வர இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இந்தியாவில் பெட்ரோல் ஸ்கூட்டர் விலையில் இந்த மின்சார ஸ்கூட்டர்களின் விலையும் இருக்குமாம். ஆண்டிற்கு 1 லட்சம் மின்சார ஸ்கூட்டர்களை விற்பனை செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளது.