திருச்சியில் Banjo’s குளிர்பான நிறுவனத்தின் சார்பில் கோலிசோடா அறிமுகம்!
உள்நாட்டு குளிர்பான உற்பத்தியில் கடந்த 25 ஆண்டுகள் தனியிடம் பெற்று சிறப்பாக விற்பனை செய்து வரும் நிறுவனம் Banjo’s. இந்த நிறுவனத்தின் புதிய அறிமுகமாக கோலிசோடா கண்ணாடி பாட்டில் மற்றும் பெட் பாட்டில்களில் 11 வகையான சுவைகளில் விற்பனைக்கு வருகிறது.
இதன் அறிமுக விழா திருச்சி ரம்யாஸ் ஹோட்டலில் இன்று (8.10.2022) காலை 11.00 மணியளவில் நடைபெற்றது. தொழிலதிபர் ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற விழாவில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில பொதுச்செயலாளர் கோவிந்தராஜூலு வாழ்த்துரை வழங்கி முதல் விற்பனையை தொடங்கி வைத்தார்.
திருச்சி மாவட்ட மொத்த விற்பனையாளர் நிதீஷ் மற்றும் அரியலூர் மாவட்ட விற்பனையாளர் சக்தி வேல் ஆகியோர் பெற்று கொண்டனர். இது குறித்து Banjo’s நிறுவனம் சார்பில் VRS எண்டர்பிரைசஸ் நிர்வாக இயக்குநர் கிருஷ்ணன் கூறுகையில் கடந்த 25 ஆண்டுகள் உள்நாட்டு உற்பத்தி குளிர்பான வரிசையில் தரமான முறையில் மிகச்சிறந்த சுவையான குளிர்பானங்கள் விற்பனை செய்து வருகிறோம்.
தற்போது கோலிசோடா கண்ணாடி பாட்டில்களில் மற்றும் பெட் பாட்டில்களில் விற்பனை தொடங்கி உள்ளோம். இதில் அனைத்து தரப்பினருக்கும் பிடித்தமான பன்னீர், மின்ட், நன்னாரி, கிரேப், ஆரஞ்சு, பைனாப்பிள், WHITE Lemon, Green Lemon, Black current போன்ற 11 வகையான சுவைகளில் அறிமுகம் செய்துள்ளோம் என்று தெரிவித்தார்.