திருச்சியில் முதல் முறையாக திறந்தவெளி தியேட்டர்!
திருச்சியில் முதல் முறையாக திறந்தவெளி திரையரங்கம்
திருச்சியில் திறந்தவெளி திரையரங்கம் 12.10.2022 ம் தேதி மாலை திறக்கப்படுகிறது.
திருச்சி திண்டுக்கல் சாலையில் நவலூர் குட்டப்பட்டு அருகில் மாநகர வளர்ச்சியில் மற்றொரு மைல் கல்லாக டிரைவின் தியேட்டர் என்று அழைக்கப்படும், திறந்தவெளி திரையரங்கம் வரும் 12ம் தேதி மாலை திறக்கப்பட உள்ளது.
திருச்சியில் ஏராளமான நவீன ஏசி தியேட்டர்கள் இருந்தாலும் டிரைவின் தியேட்டர் இதுவரை இல்லை.
சினிமா பார்க்க வரும் ரசிகர்கள் தங்கள் காரில் இருந்து சினிமா பார்க்கும் வசதியை இந்த தியேட்டர் அளிக்கும். இது போன்ற ஒரு புதிய டிரைவின் தியேட்டரை திருச்சியை சேர்ந்த பிரபல டாக்டர் குடும்பத்தினர் நிர்மாணித்துள்ளனர்.
திருச்சிக்கு டிரைவின் தியேட்டர் புதிய வரவு என்றாலும் இது திருச்சி மட்டுமல்லாமல் மாவட்டம் முழுவதும் உள்ள மக்களுக்கு புதிய ஒரு அனுபவமாக இருக்கும். சுமார் 100 கார்கள் நிறுத்தும் வசதி, நவீன ஹோட்டல் போன்ற பல்வேறு வசதிகளுடன் இந்த தியேட்டர் பயன்பாட்டுக்கு வர உள்ளது.
– சந்திரமோகன்