திருச்சி ஜாஸ் அட்வர்டைசிங் ஏஜென்சி நிர்வாக இயக்குனருக்கு Behindwoods விருது
திருச்சி ஜாஸ் அட்வர்டைசிங் ஏஜென்சி நிர்வாக இயக்குனருக்கு Behindwoods விருது
behindwoods சார்பாக திருச்சியில்
நடைபெற்ற சிறப்பு நகைச்சுவை பட்டிமன்றம் நிகழ்ச்சியில் 20 ஆண்டுகளுக்கு மேலாக விளம்பரத்துறையில் சிறப்பாக பணியாற்றிய ஜாஸ் அட்வர்டைசிங் ஏஜென்சி நிர்வாக இயக்குனர் நௌசாத் அவர்களுக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
தனலட்சுமி சீனிவாசன் சிட்பண்ட்ஸ் ,அஸ்வின் ஸ்வீட்ஸ், முசிறி எம் ஐ டி கல்வி நிறுவனங்கள் இ விஸ்டம் ஹெல்த் இன்டர்நேஷனல் பள்ளி BehindWoods யூடியூப் சேனல் ஆகியவற்றின் சார்பில் திருச்சி தேவர் ஹாலில் நகைச்சுவை பட்டிமன்றம் நடைபெற்றது.
பேராசிரியர் கு. ஞானசம்பந்தன் நடுவராக இருந்து நடத்திய இப் பட்டிமன்றத்தில் இன்றைய காலத்தில் பொதுவாக ஈகோ ஆண்களுக்கு அதிகமா? பெண்களுக்கு அதிகமா? என்ற தலைப்பிலும்தொடர்ந்து ஆண்களுக்கு அதிக பாசம் கிடைப்பது தாயிடம் இருந்தா? தாரத்திடம் இருந்தா? என்ற தலைப்பிலும் பட்டிமன்றம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் அஸ்வின் சுவீட்ஸ் CEO அஸ்வின், விஸ்டம் ஹெல்த் இன்டர்நேஷனல் பள்ளி தாளாளர் வீரசக்தி, முசிறி எம். ஐ. டி கல்வி நிறுவனங்களில் துணைத் தலைவர் பிரவீன் குமார், சென்னை மார்க்கெட்டிங் பிரிவு மேலாளர் விஸ்வநாதன் தேவராஜ் ,திருச்சி மேலாளர் விஜயன், கோவை மேலாளர் திலிப் குமார் உட்பட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.