டோக்கனைசேஷன் என்றால்……? வேலை செய்யும் விதம்…
ஆன்லைனில் பொருட்களை வாங்க தற்போது டெபிட் மற்றும் கிரிடிட் கார்டுகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால் சில நேரங்களில் இந்த வகை பரிவர்த்தனைகள் ஹேக்கர்கள் புகுந்துவிடுவதால் தோல்வியில் முடிவதுடன், பணத்தை இழக்கும் அபாயமும் உள்ளது. இந்த சூழலில் டோக்கனைசேஷன் என்ற புதிய முறையை வரும் அக்டோபர் 1ம் தேதி முதல் அறிமுகப்படுத்த உள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
இந்த வகை டோக்கன்கள் மூலம் உங்கள் 16 இலக்க எண் இனி ஒவ்வொரு முறையும் பதிவிட வேண்டிய அவசியம் இருக்காது. 16 இலக்க எண்களுடன் சிவிவி எண்களும் அடிக்கடி தேவைப்படாது என்பதால் உங்கள் வங்கியில் உள்ள பணம் பாதுகாப்பாகவே இருக்கும், முற்றிலும் இலவசமாக அறிமுகமாக உள்ள டோக்கனைசேஷன்களின் மூலம் கிரிடிட் மற்றும் டெபிட் கார்டுகளின் முக்கிய ரகசிய எண்களை இனி பதிவிடவேண்டிய அவசியம் இருக்காது ஒரு முறை உங்கள் டெபிட் கார்டுக்கு டோக்கன் பெற்றுவிட்டால் எத்தனை முறை வேண்டுமானாலும் உங்கள் டோக்கனை வைத்து பணத்தை செலுத்த முடியும்.
இந்த புதிய முறை காட்டாயம் இல்லை என்றாலும், பாதுகாப்பான பரிவர்த்தனைகளை தொடர விரும்புவோர் இதனை எடுத்துக் கொள் ளலாம் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
கார்ட் ஒன்றுதான் என்றாலும் எத்தனை டோக்கன்கள் வேண்டுமானலும் எடுத்துக்கொள்ளும் வசதி அறிமுகமாக இருக்கிறது. உதாரணமாக உங்கள் கார்டின் மூலம் பிளிப் கார்டில் பணம் செலுத்த முயற்சி செய்யும் போது ஒரு டோக்கன் பயன்படுத்தப்படும், அதே டோக்கன் வேறொரு நிறுவனத்துக்கு பயன்படாது. ஆனால் ஒவ்வொரு முறையும் நீங்கள் 16 இலக்க எண்களை பதிவிடவேண்டிய அவசியம் இருக்காது. கார்டு தொலைந்துவிட்டால், புதிய கார்டின் அடிப்படையில் புதிய டோக்கனை எளிதாக பெற முடியும்