உணவு டெலிவரி துறையிலும் சாதிக்கும் பெண்கள்
இவரை சென்னைவாசிகள் பல பேருக்கு தெரிந்தது இருக்க கூடும். இவர் பெயர் உமா ,10 வருடங்களுக்கு முன்பு கணவர் இறந்து போனார்.. ஆனால் இவர் மனம் தளராமல், zomato என்னும் நிறுவனத்தில் வேலை செய்து கொண்டு தன் மகனையும் வளர்த்து கொண்டு இருக்கிறார்.
காலையில் எழுந்து மகனை கிரிக்கெட் கோச்சிங் கிளப்பில் கொண்டு போய் விட்டுவிட்டு அதன் பிறகு வீடு வாசல் கூட்டி, துணிகளை துவைத்து போட்டு ,சாப்பாடு செய்த பிறகு மதியம் 12 மணிக்கு டான்னு ஆஜராகி விடுகிறார்.
ஒரு நாளைக்கு இவர் 25 முதல் 30 ஆர்டர்கள் வரை டெலிவரி செய்கிறார்.. ஒரு நாளைக்கு சராசரியாக 200 km வரை பயணம் செய்கிறார் ..
இரவு 11 மணி வரை இவரது நேரத்தில் ஒரு நாள் கூட உணவு தாமதம் மற்றும் ஆடர்கள் கேன்சல் செய்ய பட வில்லை என்பது குறிப்பிட தக்கது. அதனை பாராட்டி diamond excellence award இவருக்கு zomato இந்தியா நிறுவனம் இவருக்கு வழங்கியுள்ளது.
பொதுவாக இது போன்ற டெலிவரி செய்யும் பணிக்கு ஆண்கள் தான் போவார்கள்.. ஆனால் இந்த வேலையிலும் நான் ஆண்களுக்கு சளைத்தவர்கள் அல்ல என்று நிரூபித்து காட்டிய பெண்மணிகள் இவர்கள்.
மென்துறை முதல் பொதுத்துறை வரை சாதிக்கும் பல பெண்களை போல இவர்களும் அவருடைய துறையில் ஒரு சாதனையாளர்களாக வலம் வருகிறார்கள்