திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் வள்ளலார் 200 சிறப்புக் கருத்தரங்கம்
திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் வள்ளலார் 200 சிறப்புக் கருத்தரங்கம்
திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி தமிழாய்வுத் துறையின் சார்பாக வள்ளலாரின் 200ஆம் ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு வள்ளலார்200 என்னும் தலைப்பில் சிறப்புக் கருத்தரங்கம் இணையவழியில் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் அருள்முனைவர் ம. ஆரோக்கியசாமி சேவியர் தலைமை வகித்தார். இணையவழிக் கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர் முனைவர் சி. ஷகிலாபானு வரவேற்புரையாற்றினார். தமிழாய்வுத்துறை தலைவர் முனைவர் ஞா.பெஸ்கி அறிமுக உரையாற்றினார்.
திருவண்ணாமலை வள்ளலார் சன்மார்க்க சங்கப் பொறுப்பாளர் சுவாமி சாது சரவணன் அவர்கள் எது அறிவு என்கிற மையப்பொருளில் உரையாற்றினார். அவர் தம் உரையில், உயிர்களைத் தம்முயிர் போல் பேணுவதும், ஒழுக்கத்துடன் வாழ்வதுமே அறிவு ஆகும். எனவே மாணவர்கள் திருவருட்பாவை ஆழமாகக் கற்று அது எடுத்துரைக்கும் உயரியசிந்தனைகளை தம் வாழ்வில் கடைபிடிக்கவேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். தொடர்ந்து அமெரிக்காவின் புளோரிடா பல்கலைக்கழக வள்ளலார் ஆய்விருக்கைக் குழு உறுப்பினர் திருமிகு. தாமல் கோ. சரவணன் வள்ளலாரும் தமிழும் என்கிற மையப்பொருளில் கருத்துரையாற்றினர்.
திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் வள்ளலார் 200 சிறப்புக் கருத்தரங்கம்
இணையவழியில் நடைபெற்ற இக்கருத்தரங்கில் தமிழ் இலக்கிய மாணவர்கள், முனைவர் பட்ட ஆய்வாளர்கள், பேராசிரியர்கள், தமிழ் ஆர்வலர்கள் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர் முனைவர் சி. ஆரோக்கிய தனராஜ் நன்றியுரையாற்றினார். முனைவர் பட்ட ஆய்வாளர் மு. பிரபாகரன் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார்.