ரூ.399க்கு ரூ.10 லட்சம் மதிப்புள்ள பாலிசி அறிமுகம்
அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கியில் சாமானிய மக்களுக்கும் விபத்து காப்பீட்டின் சலுகைகள் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் இந்த திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி, டாடா ஏஐஜி பொது காப்பீட்டு நிறுவனத்துடன் இணைந்து, ஆண்டுக்கு ரூ.399 பிரீமியத்தில், ரூ.10 லட்சம் மதிப்புள்ள விபத்து காப்பீடு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் ஆண்டுக்கு வெறும் ரூ.399 பிரீமியத்தில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள விபத்து காப்பீட்டை பெறலாம். 18 முதல் 65வயது வரை உள்ளவர்கள் இதில் சேரலாம். விரல் ரேகை மூலம் 5 நிமிடங்களில் டிஜிட்டல் முறையில் இந்த பாலிசி வழங்கப்படுகிறது.
இந்த காப்பீட்டின் மூலம் விபத்தால் ஏற்படும் உயிரிழப்பு, நிரந்தர முழு ஊனம், நிரந்தர பகுதி ஊனம், பக்கவாதம் ஆகியவற்றுக்கு இழப்பீடு பெற முடியும்.
பொதுமக்கள் மிக எளிதான முறையில் இந்த காப்பீட்டு திட்டத்தில் சேரலாம் என அஞ்சல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைனிலும் இதுக் குறித்து தெரிந்து கொள்ள வசதிகள் செய்யப்பட்டுள்ளன.